Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியை கடத்திய இஸ்ரேல்?

காஸாவுக்கு விரைந்த நிவாரணப் படகுகள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டது!

 காஸாவுக்கு விரைந்த நிவாரணப் படகுகள் இஸ்ரேலியப் படைகளால் இடைமறிக்கப்பட்டு, தனது சகோதரி கடத்தப்பட்டுள்ளதாக அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிப்பதாக அயர்லாந்து ஜனாதிபதி கேத்ரின் கொன்னொலி தெரிவித்துள்ளார். 'குளோபல் சுமுத்'நிவாரணப் படகுக் குழுவிலிருந்து இஸ்ரேலியப் படைகளால் அழைத்துச் செல்லப்பட்ட ஆறு அயர்லாந்து பிரஜைகளில், அயர்லாந்து ஜனாதிபதியின் சகோதரியான மார்கரெட் கொன்னொலியும் ஒருவர் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது முற்றிலும் கொடூரமானது.... லண்டனில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அயர்லாந்து ஜனாதிபதி கொன்னொலி, "இந்தச் சம்பவம் மிகுந்த மனவேதனையைத் தருகிறது என்றும் அவருடன் படகில் இருந்த ஏனைய சகாக்கள் குறித்தும் தாம் பெரும் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏழு மாதங்களில் மட்டும் 33 அயர்லாந்து பிரஜைகள் இஸ்ரேலால் இதுபோன்ற சம்பவங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது அரசாங்கம் இஸ்ரேலுக்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதிப்பதா இல்லையா என்று இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறதாகவும் அயர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இது முற்றிலும் கொடூரமானது இந்த இனப்படுகொலைக்குத் துணைபோகும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நிலைப்பாடு முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்" என்றும் அயர்லாந்து ஜனாதிபதி கொன்னொலி மேலும் தெரிவித்த்தார்.