Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்!

அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்

இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தாக்குதல்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்று இஸ்ரேலிய ஹைபா பகுதியில் விழுந்து வெடித்துள்ளதாகவும் ஈரான் மீது அமெரிக்க மற்றுமொரு சுற்று தாக்குதலை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

- சர்வதேச ஊடகங்கள்.
இஸ்ரேலில் அவசரகால நிலை பிரகடனம். வான்பரப்பும் மூடப்பட்டது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல். 
குவைட்டில் உள்ள அமெரிக்க படை தளத்தின் மீதும் ஈரான் தாக்குதல். அபுதாபியிலும் பாரிய வெடிப்பு சம்பவம். சவுதி அரேபிய ரியாதில் உள்ள அமெரிக்க படைத்தளம் நோக்கியும் ஈரான் தாக்குதல்.

இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவில் பாரிய வெடிப்பு சம்பவம். அபுதாபி விமான நிலையம் அருகே மீண்டும் பாரிய வெடிப்பு சம்பவம்.

ஈரான் ஏவிய ஏவுகணைகளை ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்தது. அப்போது சிதறிய ஏவுகணைத் துண்டுகள் தாக்கியதில் ஆசிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க, இஸ்ரேலிய ராணுவத் தளங்கள், மற்றும் பிற சொத்துக்கள் அனைத்தும் இனி ஈரானிய ராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதல் இலக்குகள் ஆகும். எதிரிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்படும் வரை இந்த ராணுவ நடவடிக்கை ஓயாது ஈரான் ராணுவம் பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் போரில் ஹௌதிகள் மீண்டும் தாக்குதல். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களில், ஈரானின் மினாப் (Minab) நகரில் குறைந்தது 24 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குவைத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்.  பஹ்ரைனின் அதியுயர் அடுக்குமாடி  கட்டடம் ஒன்றை தாக்கியழித்த ஈரானிய ட்றொன்!  எவ்வித எதிர்ப்பும், இடைமறிப்புமின்றி ஈரானிய ட்றொன் பஹரைன் வரை சென்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
துபாய் மற்றும் அபுதாபியில் வெடிப்புகள் நடப்பதாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி பின்வரும் நாடுகளின் விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தனது தாக்குதவை ஆரம்பித்துள்ளது.

கத்தாரில் உள்ள அல்-உதெய்த் விமானத் தளம்
குவைத்தில் உள்ள அல்-சேலம் விமானத் தளம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல்-தஃப்ரா விமானத் தளம்
பஹ்ரைனில் ஐந்தாவது அமெரிக்கத் தளம்
மேலும், சவுதி அரேபியாவின் ரியாத்திலும் குண்டுவெடிப்புகள் நடந்ததாக AFP செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. ஈரானினால் ஹோர்மூஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, தெஹ்ரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அதியுயர் தலைவர் தியாகியாகினார் | ஈரானிய அரசு ஊடகம் அதிகார அறிவிப்பு.

ஈரானிய அரசு ஊடகங்களின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஆயத்துல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் "தியாகியாகிவிட்டார்" என்று அரசு தொலைக்காட்சி அறிவித்தது.
40 நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டது.  மேலும், ஈரானில் 7 நாட்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அலி கொமெய்னி இறந்து விட்டார், அவரது சடலத்தின் புகைப்படத்தை நானும் டொனால்ட் ட்றம்பும் பார்த்துவிட்டோம்!  கமேனி இறந்துவிட்டார் என்பதற்கான "அறிகுறிகள் அதிகம் உள்ளன"

எனினும் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் "தேவைப்படும் வரை" நீடிக்கும். தாக்குதல்களில் ஈரானிய புரட்சிகரப் படைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் அணுசக்தி அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஈரானில் ஆயிரக்கணக்கான இலக்குகள் வரும் நாட்களில் தாக்கப்படும். மேற்கண்டவாறு நெதன்யாஹு சற்றுமுன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையில் கமேனி வளாகத்தில் 30 குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய ஹீப்ரு சனல்-12 முன்பு தெரிவித்தது. கொனெய்னியின் வளாகத்தில் முப்பது குண்டுகள் வீசப்பட்டன. அலி கமேனி நிலத்தடியில் இருந்தார்.
ஆனால் அநேகமாக அவரது சொந்த பதுங்கு குழியில் இல்லை" என்று  நெதன்யாகுவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் சேனல் 12 இன் அமித் செகல் கூறினார்.