இரவு விடுதிக்கு சென்றதாலா இலங்கை அணி தோற்றது?: நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்
.

இரவு விடுதிக்கு சென்றதாலா இலங்கை அணி தோற்றது?: நிரூபிக்கப்பட்டால் பதவி விலகுவேன்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தொடர்ந்து கருத்துரைத்த அமைச்சர்;
அரசியல் ரீதியாக இலங்கையில் ஒருசிலர் இருக்கின்றனர் எமது கிரிக்கெட் அணி தோல்வியடைவதை காண்பதற்கு ஆசைகொண்டவர்கள்.
மகளிர் கிரிக்கெட் அணியும் இந்த நிறுவனத்தின் ஊடாக இதே அனுகுமுறைக்கு அமையவே போட்டிகளில் பங்கேற்கிறது.
நான் பதவியேற்றதன் பின்னர் 12 போட்டிகளில் 7 போட்டிகளை வெற்றிகொண்டுள்ளோம்.
இந்த நிலையில், முதல் நள்ளிரவு 12 மணிக்கு வெளியே சென்ற அணி, மறுநாள் பயிற்சியில் பங்கேற்றதாக எமது முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விடயத்தை யார் வேண்டுமானாலும் நிரூபிக்க முடியும். அவ்வாறு நிரூபிக்கப்படுமானால் நான் பதவி விலகத் தயார்.
ஒரு நாடாக நாம் குழந்தைகளுக்கு உதவ வேண்டும். அதை விடுத்து குறைந்தபட்சம் ஜில் போலையாவது விளையாடாதவர்கள் சமூக ஊடகங்களில் சேறு பூசுவது ஏற்புடையதல்ல என நினைக்கின்றேன்.
அத்துடன், லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் குறித்து கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான அதிகாரம் எனக்கு இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.