Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்!

.

கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. 

விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்த நிலையில் அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில் இருந்து இன்று அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ரஷ்யாவின் குரோசனி நகருக்கு புறப்பட்டு சென்றது.

இந்த விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் என்று மொத்தம் 72 பேர் பயணித்தனர். இந்த விமானம் கசக்கஸ்தான் நாட்டின் வான்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது விமானத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. கசக்கஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது.

தரையில் மோதிய வேகத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் பயணித்த 72 பேரின் கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. மீட்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.