Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான கருத்து வேறுபாடு காரணமாக, நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்டு பதவி விலகினார்!

.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான(Justin Trudeau) கருத்து வேறுபாடு காரணமாக அந்நாட்டு நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலேண்டு (Chrystia Freeland) பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றையதினம்(16) வருடாந்திர அரசாங்க நிதி அறிவிப்பை வழங்குவதற்காக சில மணி நேரங்களுக்கு முன்பு இவர் தனது பதவி விலகல் கடிதத்தை ட்ரூடோவுக்கு அனுப்பியுள்ளார்.

கனடாவின்(Canada) வளர்ச்சிக்கான சிறந்த பாதை குறித்து ட்ரூடோவுடன் உடன்பாடு இல்லை என்று இக் குறித்த கடித்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரூடோ அரசின் மிக முக்கிய பொருளாதார ஆலோசகராக மேலும் இருக்க விரும்பவில்லை என்பதையும் அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில், கனேடியர்களுக்கு 250 கனேடிய டொலர் வழங்கும் திட்டம் குறித்து ஃப்ரீலேண்டு மற்றும் ட்ரூடோ இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டம் கனடாவால் ஏற்க முடியாத செலவை ஏற்படுத்தும் அரசியல் யுக்தியாக இருப்பதாக ஃப்ரீலேண்டு விமர்சித்திருந்தார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் கனேடிய பொருட்களுக்கு 25% வரி விதிப்பது குறித்து மிரட்டல் விடுத்துள்ளார்.இதனால் கனடாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“இப் பிரச்சனை கனடாவுக்கு பெரும் சவாலாக இருக்கும்” என ஃப்ரீலேண்டு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.2020-ல் நிதியமைச்சராக பதவி ஏற்ற ஃப்ரீலேண்டு, கோவிட்-19 பேரிடரின் போது கனடாவை வழிநடத்த முக்கியப் பங்கு வகித்துள்ளார்.

மேலும் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகியபோதும்,நாடாளுமன்ற உறுப்பினராக தொடரவும், எதிர்வரும் தேர்தல்களில் மீண்டும் போட்டியிடவும் திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.