சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் “ஈழநாதம்” சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்” நூல் அறிமுகம்
இளைய தலைமுறையினர் மண்டபத்தினூடாக “போரின் சாட்சியம்” நூலை அரங்குக்கு எடுத்து வந்தனர்.
போரின் சாட்சியம்' நூல் அறிமுகம்.
இன்று சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் மாநிலத்தில் 'ஈழநாதம்' சுரேன் கார்த்திகேசுவின் 'போரின் சாட்சியம்' நூல் அறிமுகம் கண்டது. பொதுச்சுடரினை மாநிலச் செயற்பாட்டாளர் கிருபாகரன் ஏற்றி வைத்திருந்தார். வரவேற்புரையினை அன்பரசன் நிகழ்த்தியிருந்தார்.தொடர்ந்து இளம் பாடகர்களின் முள்ளிவாய்கால் நினைவு சுமந்த பாடல்கள் இடம்பெற்றது. சிறுமி அபி முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடலை பாடி முடித்த பொழுது அவளும் அழுது சபையும் அழுதது வார்த்தைக்குள் அடக்க முடியாத உணர்வின் உச்சம். 'தமிழ் நெற்' ஜெயா அவர்களின் நூல் பற்றிய பார்வையும் தமிழரின் இன்றைய நிலை பற்றியும் எம் மீது பின்னப்படும் வலைஇ வார்த்தைப் பயன்பாடுகளால் ஏற்படும் வரலாற்று மாற்றம் பற்றியும் நீண்ட விரிவான பார்வையொன்றை முன் வைத்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து இளைய தலைமுறையினர் மண்டபத்தினூடாக 'போரின் சாட்சியம்' நூலை அரங்குக்கு எடுத்து வந்தனர். முதற் பிரதியை சுவிஸ் தமிழ்க் கல்விச் சேவையின் பணிப்பாளர் திரு. பார்த்தீபன் கந்தசாமி வெளியிட்டு வைக்க ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் துணைவியார் திருமதி நந்தினி சத்தியமூர்த்தி பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகளை மூத்த படைப்பாளி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களும் ஒளிப்படக்கலைஞர் திருமதி சேரலாதன் அமலா அவர்களும் தாயக இசையமைப்பாளர் முகிலரசன் அவர்களும் வெளியிட்டு வைக்க சமூகச் செயற்பாட்டாளர்களும் படைப்பாளிகளும் பெற்றுக்கொண்டார்கள். சலங்கை நர்த்தனாலய மாணவிகள் மற்றும் பரததர்சனாலய மாணவிகளின் முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த எழுச்சி நடனங்களும் இந்திரன் குழுவினரின் மங்கல்வாத்தியத்திலான தாயக இசையும் இடம்பெற்றன. இரத்தினம் கவிமகனின் முள்ளிவாய்க்கால் நினைவுரையும்இ படைப்பாளியும் சுரேன் கார்த்திகேசு காயப்பட்ட பொழுது பராமரித்து சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவப் போராளியுமான மிதயா கானவியின் சுரேன் மற்றும் நூல் பற்றிய உரையும் தமிழீழ விளையாட்டுத்துறையின் ஆசிரியர் இன்பர் அவர்களின் உரையும் செல்வி நிதுர்ஷனா இரவீந்திரன் அவர்களின் அடுத்த தலைமுறையினருக்கான ஜெர்மன் மொழியிலான உரையும் புலிகளின் குரல் அறிவிப்பாள் ஜனனி கார்த்திகேசு.அவர்களின் நன்றியுரையும் இடம்பெற்றிருந்தன.