Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சம்பந்தனுக்கு பெருந்திரளானோர் அஞ்சலி; நாடாளுமன்றில் இன்று அஞ்சலிக்காக வைக்கப்படும் பூதவுடல்.

.

காலஞ்சென்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் புகழுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் கொழும்பு – பொரளையிலுள்ள ஏ.எவ்.றேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டது.

Oruvanஅன்னாரின் புகழுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், கட்சி உறுப்பினர்கள், வெளிநாடுகளின் தூதுவர்கள், பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தினர்.

அன்னாரின் புகழுடல் இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை நாடாளுமன்றத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் வௌ்ளிக்கிழமை காலை 9 மணி முதல் திருகோணமலையிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கிரியைகள் முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

உடல் நலக்குறைவால் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலேயே 91 ஆவது வயதில் அவர் இயற்கை எய்தினார்.