Breaking News
கட்டுப்பணம் செலுத்தினார் அனுர: வேட்பாளர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு
.
தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இன்று (06) காலை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது கட்சியின் சட்டத்தரணிகளுடன் வந்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.