Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை!

20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 15 T-56 ரக துப்பாக்கிகள், ஐந்து 9mm கைத்துப்பாக்கிகள் காணாமல் போன ஆயுதங்கள்.

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணை. 
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட 20 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காணாமல் போன ஆயுதங்களில் 15 T-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ஐந்து 9mm கைத்துப்பாக்கிகள் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட T-56ரக துப்பாக்கிக்குரிய  1,500க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் 9mm தோட்டாக்கள் குறித்தும் விசாரணைகள் நடந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

2000இல் யாழ்ப்பாணத்தை மாத்திரமின்றி இலங்கையை உலுக்கிய மிருசுவில் படுகொலையில் உயிர் தப்பிய ஒருவர் அப்போதைய யுத்த கால நெருக்கடியால்  டக்ளஸ் தேவானந்தாவிடம் சரணடைந்தார். அப்படி சரணடைந்தவரை டக்ளஸ் தேவானந்தா மீள அதே இராணுவத்திடம் கையளித்தார். 
டக்ளசின் ஈழ மக்கள் விரோதச் செயலுக்கு இது தக்க உதாரணம்.  
இப்படி, போராளிகளை பொதுமக்களை ஸ்ரீலங்கா அரசுக்கு காலம் காலமாக காட்டிக் கொடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக பல பிரச்சாரங்களை செய்து வரலாற்று துரோகம் இழைத்த டக்ளஸ் தேவானந்தா கர்ம வினையை இப்போது அறுவடை செய்கின்றார்.
1994 யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் காட்டிக் கொடுப்பினாலும் அசுர ஏற்பாடுகளினால் யாழ்ப்பாண மக்கள் பெருந்துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். ஊடகவியலாளர்கள்,
 கலைஞர்கள் பலர் காணாமல் ஆக்கப்பட்டார்கள். கொல்லப்பட்டார்கள். 
அத்துடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் நோக்கில், கொச்சைப்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கா அரசுக்கு ஒரு துணை ஆயுதக் குழுவாக வன்முறைகளில் ஈடுபட்ட அதே வேளை கருத்தியல் ரீதியாகவும் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான செயற்பாடுகளை டக்ளஸ் முன்னெடுத்தார்.  
உப்புத் தின்றவன் தண்ணி குடித்தே தீர வேண்டும் என்பதைப் போல அரசியல் பிழைப்போருக்கு அறம் கூற்றாகும் என்பதைப் போல தான் செய்த கருமவினைகளின் பலனை டக்ளஸ் தேவானந்தா அனுபவிக்கின்ற ஆரம்பமே இந்த கைது.
இது இன்னமும் மக்களுக்கு துரொகம் இழைத்து தமது சுயநல அரசியலைச் செய்கின்றவர்களுக்கும் ஒரு பாடமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கும் என்பதையும் நினைவுகொள்ளவேண்டும்.