Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

தடை உத்தரவை மீறி தலைநகர் டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் பேரணி!

.

தடை உத்தரவை மீறி தலைநகர் டெல்லி நோக்கி பஞ்சாப் விவசாயிகள் இன்று பேரணி செல்ல உள்ளதால் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாத உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லிக்கு செல்வோம்' போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

சம்யுக்தா கிசான் மோட்சா, கிசான் மஸ்தூர் மோட்சா ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் பஞ்சாப் – ஹரியானா இடையே அமைந்திருக்கும் சம்பு எல்லையில் நேற்று முன்தினம் குவிந்தனர். அவர்களுடன் பஞ்சாப் காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல்துறையினர்; டெல்லி நோக்கி அமைதியாக நடைபயணம் மேற்கொள்ளப்போவதாகவும், டிராக்டர் பேரணி நடத்த போவதில்லை எனவும் விவசாயிகள் உறுதி அளித்துள்ளதாக கூறினர்.

இந்நிலையில் டெல்லியில் 4 பேர் கூட தடை விதிக்கப்பட்டு இருப்பதால் விவசாயிகள் ஜோடியாக அதாவது இரண்டிரண்டு பேராக சம்பு பகுதியில் இருந்து டெல்லி நோக்கி இன்று மதியம் பேரணி தொடங்குவார்கள் என விவசாய சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார். தங்கள் பேரணியை அரசு தடுத்து நிறுத்தினால் அது தார்மீக வெற்றி தான் என்றும் அவர் தெரிவித்தார்.

போலீசாரின் கெடுபிடியை பார்க்கும் போது இது பஞ்சாப் – அரியானா எல்லை போல் தெரியவில்லை, மாறாக சர்வதேச எல்லை போல தெரிகிறது என்றும் விவசாய சங்க தலைவர்கள் குற்றச்சாட்டினர். விவசாயிகளின் அறிவிப்பை அடுத்து அரியானா எல்லைப்பகுதியில் துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் பேரணி காரணமாக டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.