Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!

ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது.

சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் கடும் உயர்வு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன.  ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நேற்று (1) நடவடிக்கை எடுத்திருந்தது. 
இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட தடங்கலாலும் ஏனைய பிற காரணிகளாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கட்டார் கொண்டுள்ளது. 

இதில் பெரும்பாலானவை ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கடல் மார்க்கமாகப் போக்குவரத்து செய்யப்படுகின்றன. கத்தாரின் முக்கிய வாடிக்கையாளர்கள் ஆசியாவில் இருந்தபோதிலும், அங்கு ஏற்படும் விநியோகத் தடை உலக சந்தையில் பெரும் போட்டியை உருவாக்கி விலையை உயர்த்தியுள்ளது. 
அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இஸ்ரேலில் சில எரிவாயு உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டிருப்பது இந்த நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

ஐரோப்பாவில் குளிர்காலம் முடிவுக்கு வருவதால் எரிவாயு பயன்பாடு குறைந்தாலும், அங்குள்ள இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. 
எதிர்வரும் கோடை காலத்தில் இந்த இருப்பை மீண்டும் நிரப்ப வேண்டியுள்ளதால், தற்போதைய விலை உயர்வு ஐரோப்பாவுக்கும் பெரும் சவாலாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.