அன்றே இந்தியாவை கணித்து வைத்திருந்த தலைவன்
.
அன்றே இந்தியாவை கணித்து வைத்திருந்த தலைவன்!
புலிகளுக்கான பயிர்ச்சிக்கு இந்தியா அழைத்த போது போராளிகளுக்கு தலைவர் சோன்ன செய்தி அவர்கள் உங்களிடம் தந்திரமாக பேசி உங்கள் ஊர் பாடசாலை உறவினர் பற்றி கேட்பார்கள் ஏன் உங்கள் காதல் வாழ்க்கை பற்றியும் கேட்பார்கள் நீங்கள் உங்கள் உண்மையான தகவல்களை கூற கூடாது காதலி இருப்பதாகவே காட்டி கொள்ளுங்கள் அதுவே எமது அடுத்த கட்ட நகர்வுக்கு கை கொடுக்கும் என்றார். சீலன் கூறியது போல் எங்களைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை அண்ணையால் உருவாக்க முடியும் ஆனால் அண்ணையை போல் ஒருவர் எங்களுக்கு கிடைக்க மாட்டார், ஆகவே எங்களை இழந்தாவது அண்ணையை காக்க வேண்டும். கிட்டண்ணாவிடம் ஒரு போராளி எப்ப அண்ணை நாட்டுக்குள் வருவார் என்றார் ?
இந்த யாழ் மண்ணை எவ்வளவு விரைவாக மீட்டு எடுக்குறோமோ அவ்வளவு விரைவாக அண்ணை வருவார் என்றார் அதை செய்தும் காட்டினார். ஒரு காலத்தில் இந்திய பயிர்ச்சி பெற்றவர்களை உயர்வாக கருதிய நாட்களில் அவர்களுக்கு ஈடாக உள்ளூர் பயிரச்சிகளை ஆரம்பித்து எல்லோரும் ஒரே ஆயுதங்களை தான் இயக்குகின்றோம் என செயலில் காட்டினார். மேலும் தொடர்ந்த அவர் நாங்கள் இந்தியாவில் பயிர்ச்சி எடுத்து கொண்டு இருக்கும் போது நாட்டில் எதிரியோடு போரிட்டு கொண்டு இருந்தவர்கள் எந்த நாட்டிலும் பயிரச்சி பெற வில்லை, தலைவ்வரிடமும் மூத்த போராளிகளிடமும் நேரடியாக பயிர்ச்சி பெற்றவர்கள் என்றார். மறை முக ஆளுமை கொண்ட போராளிகளை, இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என அன்றைய யாழ் மாவட்ட தளபதி பண்டிதருக்கு உத்தரவு போட்டு இருந்தார். பண்டிதரின் முகாம் முற்றுகைக்கு உள்ளாகி பண்டிதரின் வீரசாவின் போது முகாமில் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை ரூப வாகினி வெளியிட்ட போது அதை பார்த்து வியந்த இந்தியா தமிழரான இரானுவ கொமாண்டர் பெரியசாமி அவர்களை உடனடியாக கொழும்பிற்கு அனுப்பி தங்களிடம் பயிர்ச்சி பெறாத இந்த மர்ம நபர்கள் யார்? என வினவ தொடங்கியது. அப்போது தமிழ்நாட்டில் இருந்த தலைமைக்கும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது.
எம் தலைவனே எம் வழி காட்டி. -வித்தகன்.