சீமானை ஒழிக்க வேண்டும், ஏன்? பெத்தவனுக்குதான் தெரியும் வலி. மற்றவர்களுக்கு...?
.
படிப்பதும் - படிக்காமல் போவதும் அவரவர் விருப்பம். படித்தால் விழித்துக் கொள்ளலாம், பா. ஏகலைவன்.
முன்னுரை:
நவம்பர்- 1 தமிழ்நாடு நாள் இருட்டடிப்பு செய்யப்பட்டதின் பின்னால் வஞ்சகர் - திராவிடர் ஸ்டாலின் முக்கியமானவர்.
கேட்டால், 1955 -ல் பெரியார் தான் 'தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற முழக்கத்தை வைத்தார்கள். அதையொட்டி சங்கரலிங்கனார் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி உயிர் நீர்த்தார்.
அதன் பிறகு 1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக தான், முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாதான், ஜுலை - 23 -ல் 'தமிழ்நாடு', என பெயர் சூட்டினார். அந்த பெயர் சூட்டிய நாளையே தமிழ்நாடு நாள் என கொண்டாடுவோம், என மீசை பாண்டியர்களும், திராவிட மணிகளும் யுனெஸ்கோ (திரிப்பு - பொய் - பித்தலாட்ட ) வரலாற்றை கூறுகின்றனர்.
உண்மை வரலாற்றின் உள்ளே :
முதல் மொழிவாரி மாநில கோரிக்கையை திராவிடர்கள் யாரும் தோற்றுவிக்க இல்லை.
ஒரிய மக்கள் தான் முதல் குரல் எழுப்பினார்கள். நாங்கள் தனித்த இனத்தவர்கள். எங்களுக்கென தனித்த மொழி, வரலாறு, கலை, பண்பாடு எல்லாம் உண்டு. எனவே எங்களுக்கான தனி மாகாணம் வேண்டும் என பிரிட்டிஷ் அரசுடன் போராடினார்கள்.
1895 தொடங்கி 1935- வரை ஓயாத போராட்டம் - உயிர்த் தியாகம் செய்து, இறுதியில் சூஒரிஸா' என்ற மொழிவழி மாகாணத்தைப் பெற்றார்கள்.
ஒரிய மக்களுக்கு பின்னாலேயேஇ சூமராட்டிய மக்களும் மொழிவழி 'மாகாண கோரிக்கையை 1906-ல் தொடங்கினார்கள். சுதந்திரப்போரில் பங்கெடுத்த சூபாலகங்காதர_திலகர்கூட அந்த கோரிக்கை போராட்டத்தில் 1919-களில் பங்கெடுத்தார். இறுதியில் மராட்டிய மாகாணமும் பிறந்தது.
தென்னகத்திலும் அந்த 'மொழிவாரி' மாகாணம் கோரிக்கைக் குரல் 1915-களிலேயே ஒலிக்கத் தொடங்கியது.
சுதந்திரப் போராட்ட முனைப்பில் இருந்த, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் கூடி விவாதித்து, 'மொழிவழி மாநிலம் என்பதை ஏற்கின்றது.
அதன்படியே 1921-ல் சூதமிழ்நாடு_காங்கிரஸ்_கமிட்டி, சூஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி என மொழி வழியிலேயே கட்சியின் மாகாண கட்டமைப்பை ஏற்படுத்தியது.
பிறகு பெல்காமில் நடந்த மாநாட்டிலும் மாகாணங்களுக்கு ' சூசுயாட்சி அதிகாரமும் வேண்டும் என (1921-ல்) தீர்மானத்தை போடுகிறது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் மொழிவாரி கட்சி கட்டமைப்பில், சூதிருத்தனிஇ சூதிருப்பதி சூநெல்லூர் ஆகிய பகுதிகள் ஆந்திர காங்.கமிட்டி பகுதிக்குள் கொண்டு போய் சேர்த்தார்கள். அப்போது தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவராக இருந்த சூசத்தியமூர்த்தி ஐயர்தான் அதை கடுமையாக எதிர்த்தார்.
சி. சூசங்கரன்_நாயர் அவர்கள்இ சென்னை ராஜதானி மாகாணத்தில் உள்ள பத்து மாவட்டங்களை தனியாக பிரித்து தனி மாநிலம் (சுயாட்சி) வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1926-ல் சூமத்திய_சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அது தோற்கடிக்கப்பட்டது. அந்த காலத்தில் மலையாளிகளின் அழுத்தமான ஆதிக்கம் சென்னை ராஜதானி தலைமையகத்தில் இருந்தது.
இந்த நகர்வில்..
1937-ல்
சென்னை மாகாணத்தின் பிரீமியர் அமைச்சராயிருந்த (முதல்வர்) சூஇராஜாஜி இந்தியை திணித்தார்.
அப்போது, சூமறைமலை_அடிகளார், தான் இந்தி தினிப்பு விபரீதத்தை உணர்ந்து களத்தில் இறங்கினார். அதற்கு இணையாக சூநாவலர்_சோமசுந்தரபாரதி, சூமுத்தமிழ்_காவலர் கி.ஆ.பெ. சூவிசுவநாதம், உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் ஒன்றுகூடி மக்கள் திரள் போராட்டத்தில் களம் இறங்கினார்கள்.
இந்த நேரத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் காங்.ஆட்சிக்கு ஆதரவாக இந்தியை ஆதரித்தார்இ பேசினார்.
தமிழ் அறிஞர்கள் அவரை சந்தித்து, 'இந்தி தினிப்பில் உள்ள' பாதிப்புகளை- ஆபத்துகளை எடுத்துச் சொல்லி விளக்கிய பிறகுதான் ஈ.வெ.ரா. நாயக்கரும் இந்தியை எதிர்க்கத் தொடங்கினார்.
அதையடுத்து தான் 11.9.1938-ல்இ சென்னை கடற்கரையில் பிரமாண்டமான ''இந்தி எதிர்ப்பு மாநாடு'' மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில்தான் ' தமிழ்நாடு தமிழர்க்கே' என்ற தீர்மானத்தை மறைமலை அடிகளார் முன்மொழிய. ஈ.வெ.ரா. நாயக்கரும், கி.அ.பெ.இ நாவலர் சோமசுந்தரபாரதியும் வழிமொழிந்தார்கள். இதில் ஈ.வெ.ரா.வின் ஒத்துழைப்பு பங்கை மறுக்க முடியாது. ஆனால், அவர் மட்டுமே என்ற ஸ்டிக்கர் ஒட்டும் வேலையைதான் மறுக்கின்றோம்.
ஆனால்இ அடுத்த ஆண்டே ஈவெரா, 'தமிழ்நாடு தமிழருக்கே' கொள்கையில் இருந்து உசேன் போல்டை போல் ஓடிப்போனார். கிரேட் எஸ்கேப்பானார் எனலாம்.
அதாவது ஆந்திர தெலுங்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ' நீதிக்கட்சியின் தலைமை' 1937 தேர்தலில் சுத்தமாக தோற்றுப் போய் வீழ்ந்தது. இனி காங் கட்சி ஆதிக்கம் தான். நாம் கரைசேர முடியாது என்று கருதிஇ அந்த கட்சியை தூக்கி 1939-ல் நாய்க்கரிடம் கொடுத்து விட்டுப் போனார்கள்.
இப்போது அந்த நீதிக்கட்சி ஈ.வெ.ரா நாயக்கர் கையில் .
அதை தலையில் தூக்கிக் கொண்டுஇ 'தமிழ்நாடு தமிழர்க்கே' என்ற முழக்கத்தை கைவிட்டுவிட்டு ' திராவிட நாடு' திராவிடர்களுக்கே என்ற புது முழக்கத்தை தூக்கிக் கொண்டார்.
தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற கோரிக்கைப் போராட்ட முழக்கத்திற்கு நேரெதிராக, ஈ.வெ.ரா., 'திராவிட நாடு திராவிடர்களுக்கே' என்ற கோரிக்கை முழக்கத்தை வைத்து மடைமாற்றம் செய்தார். இது ஒரு தமிழினப் பச்சைத் துரோக மோசடி. நாயக்கர் துணிந்து செய்தார்.
அதன் பிறகு பிறகு 1946-களில் ஐயா ம.பொ.சி. அவர்கள் தீவிரமாக களம் இறங்க 'தமிழ்நாடு' கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது.
அப்போது தொடங்கி 1955 வரைஇ ஈ.வெ.ரா. 'திராவிட நாடு' கோரிக்கையோடு, தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தார்.
எப்படி?
'தமிழ் நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது தமிழ் அரசுஇ தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம்இ நம்முடைய சக்தியை குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்' என்று 11.1.1947 தனது சூவிடுதலை ஏட்டில் அறிக்கையே விடுக்கிறார் நாயக்கர்.
'மொழிவழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக்காட்டி உள்ளோம். மீண்டும் கூறுகின்றோம். மொழிவழி மாகாண கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டாம்' என்று 21.4.1947-விடுதலை நாளேட்டில் எழுதுகின்றார்.
அத்தோடு நிற்கவில்லை ராமசாமி.
'மொழிவாரி என்பதை பற்றி சில சொல்கிறேன். மொழி மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்? ஜாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின் மீது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. எவராவது மொழி வழியில் மாகாணம் பிரிப்பதை கேட்பாரா' என்று 1953 விடுதலையிலும் எழுதுகிறார்.
இப்படியாக, 1939- தொடங்கி 1956 வரை ஈ.வெ.ரா. நாயக்கர் பேசி வந்தார். இந்த மனிதரைத்தான் தமிழர் தலைவர் என்கிறார்கள். ஊர்தோறும் சிலை வைக்கிறார்கள்.
இங்கே ஒரு விடயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அதுதான் நாயக்கரின் புத்தியில் இருந்த வஞ்சகம்.
இதே காலகட்டத்தில் தான், ஆந்திரர்கள் 'விசால ஆந்திரா, எனவும், மலையாளிகள் ஐக்கிய கேரளம், எனவும், கன்னடர்கள் தனி கர்நாடகம்' எனவும் கோரிக்கை வைத்து வலுவான போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.
இந்த ஈ.வெ.ரா. நாயக்கர் அங்கெல்லாம் சென்று, அவர்களைப் பார்த்து, 'முட்டா பசங்களா, தனி மாநிலம் கேட்பது திராவிட நாடு ஒற்றுமையை சீர்குலைக்கும், எவனாவது மொழிக்காக தனி மாநிலம் கேட்பானா' என்று ஒரு வார்த்தையும் கேட்கவில்லை, பேசவில்லை விடுதலை நாளேட்டில் எழுதவுமில்லை.
ஆனால்,தமிழர்களுக்குதான் அப்படி அறிவுரை சொன்னார், எழுதினார். ஏன்?
மலையாளிகளுக்கு கேரளம், தெலுங்கு மொழியினருக்கு ஆந்திர பிரதேம், கன்னட மொழியினருக்கு கர்நாடகம் கிடைத்தாலும், தமிழ்நாடு தமிழர்களுக்கானதாக இருக்கக் கூடாது, அது மட்டும் எல்லோருக்குமான பொதுவாக இருக்க வேண்டும் என்ற கெடு -உள்நோக்கம்.
போகட்டும் - அடுத்து நடந்ததை பார்ப்போம்.
1952 அக்டோபர் 19-ம் தேதி ஒரு சம்பவம் நடத்தது.
சுதந்திரப் போராட்ட தியாகியான பொட்டி ஸ்ரீராமுலு, தனி ஆந்திர மாநிலம் கோரிக்கைக்காக சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். 82 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 15-ல் இறந்து போகிறார். சென்னைக்குள்ளாக இறுதி ஊர்வலம். பெரும் கலவரம், தமிழர்களுக்கு பொருட்சேதம், உயிர்சேதம் நடக்கிறது.
சுதந்திரம் பெற்ற அடுத்த 5 ஆண்டுக்குள் இப்படியான சிக்கல் - பிரச்சனை. சமாளித்தாக வேண்டுமே என
சூபிரதமர் நேரு படிந்தார். உடனே ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கின்றார்.
சொன்னபடியே அடுத்தாண்டு 1953- அக்டோபர் 1-ம் தேதி அன்று கர்நூலை தலைநகராகக் கொண்டு, முதன் முதலாக ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது ஐதராபாத் நிஜாம் அரசின் கீழ் இருந்த தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியம்.
இதனூடாக தொடர்ந்து, தமிழ் அறிஞர்கள் மத்தியில் 'தமிழ்நாடு, கோரிக்கை எழுந்தபடியே இருந்தது.
கூடவே மத்திய அரசின் அறிவிப்புக்கு ஏற்ப மாநிலங்களின் எல்லை பிரிப்பு விடயமும் நடக்கின்றது. அதாவது மொழிவழி மாகாணம் அமைத்து விடுவதே சிறந்தது என்ற முடிவுக்கு நேரு அரசு வந்திருந்தது.
சென்னை, திருத்தனி, திருப்பதி, சித்தூர் ஆகிய பகுதிகள் ஆந்திராவுடன் சேர வேண்டும் என்ற போராட்டம் (மதராஸ் மனதே) தீரவிரமடைகிறது.
இந்த பக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு என்ற சிக்கல்.
வடக்கே ஐயா ம.பொ.சி தலைமையில் எல்லை மீட்பு போராட்டம். ஐந்து பேர் சிறை, இரண்டு பேர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.
தெற்கே கன்னியாகுமரி எல்லை மீட்பு போராட்டத்தில் ஐயா மார்ஷல் நேசமணி முன்நின்றார். 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இந்த உயிரிழப்புகள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டது. பேசப்பட வில்லை. முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை.
இவர்களின் உயிர் தியாகத்தில்தான் வடக்கே சென்னையும், திருத்தனியும், தெற்கே கன்னியாகுமரியும் தப்பி, தமிழ்நாட்டில் சேர்ந்தது.
இப்படி,
மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவது உறுதி என்றான பிறகுதான், 1955 இறுதியில் தான், ஈ.வெ.ரா. திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டுவிட்டு, மீண்டு 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோரிக்கைக்கு வந்து நின்றார்.
அதாவது
1938-ல் திராவிட நாடு என ஓடிப்போன நாயக்கர், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உறுதி என்றானபோது, நம்மவர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து நகர்த்தியிருந்த போது 1956-ல் மீண்டும் இங்கே ஓடி வந்து 'தமிழ்நாடு' என்கிறார்.
(இதைத்தான் ஐயா சுபவீரபாண்டியன் போன்றோர், 'பெரியார் 1956-ல் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பினார், அதையொட்டி சங்கரலிங்கனார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் என்று திரிக்கின்றார்கள்)
1955 -க்கு அடுத்த ஆண்டில்,ஐயா சங்கரலிங்கனார் 'தமிழ்நாடு' கோரிக்கைக்காக 1956- ஜுலை 27-ம் நாள் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். சொந்த ஊர் சூலக்கரை- பிறகு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தொடர்ந்தது. 75 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 13 அன்று தியாகி சங்கரலிங்கனார் இறந்து போகிறார்.
ஆந்திர மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவை ஆந்திர தேசம் கொண்டாடியதைப் போல், தமிழர் தலைவர் ஐயா சங்கரலிங்கனாரை திராவிட அரசு கொண்டாட வில்லை. காங்.கட்சியும் கொண்டாட வில்லை. திராவிடத்தின் சூழ்ச்சி இதுதான்.
இந்த பின்னணியோடு தான் 1956-நவம்பர் 1-ல் மொழிவாரி மாநிலம் என்பதை பிரதமர் நேரு அறிவிக்கின்றார்.
1938-ல் 'தமிழ்நாடு தமிழருக்கே என்று கடறக்ரையில் முழக்கமிட்டு ஓடிப்போய்இ திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று களமாடிய ஈ.வெ.ரா 1956-ல் தான் மீண்டும் 'தமிழ்நாடு தமிழர்க்கே' என வந்து தன்னை ஒட்டிக்கொள்கிறார் என்றோமே..
அப்படி வந்து, ஒட்டிக் கொண்டவரைத்தான், 'பெரியார் வாங்கிக் கொடுத்த தமிழ்நாடு, பெரியார் வைத்த கோரிக்கை, பெரியார் இல்லை என்றால், கோவணம் மிஞ்சியிருக்காது என விதம் விதமாக கயிறு திரித்துஇ உண்மையில் போராடிய தமிழர் தலைவர்களை எல்லாம் வரலாற்றில் இருட்டடிப்புச் செய்து விட்டனர் இந்த திராவிட வாதிகள்.
இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட போது..
தமிழகத்தின் சில பகுதிகளோடு ஆந்திரம் அமைந்தது மட்டுமல்ல,பழயை ஐதராபாத் தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைந்தது.
தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கர்நாடகம் அமைந்தது.
தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கேரள மாநிலம் அமைந்தது.
அந்த மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1-ம் தேதியைத்தான் மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகின்றது.
ஆனால் காங் கட்சி, பிறகு வந்த திராவிட கட்சிகளும், 'நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள்' என்பதை கொண்டாடவே விரும்பவில்லை. காரணம் இரண்டு கட்சிகளும் 'தமிழநாடு தமிழர்க்கே' என்ற கோரிக்கையில் உடனிருக்கவில்லை. பங்கேற்கவில்லை, துரோகம் செய்தவர்கள். அதனாலேயே தமிழ்நாடு நாளை கொண்டாட முனைப்பு காட்டவில்லை.
1967-ல் முதல் 1977 வரை இருந்த அண்ணா- பிறகு வந்த கருணாநிதி ஆட்சி வரையிலும் 'நவம்பர்-1' தமிழ்நாடு நாளை கொண்டாட வில்லை.
1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 1981-ல் தான் 'நவம்பர்-1' தமிழ்நாடு நாளை கொண்டாடுவதாக அறிவித்து, கொண்டாடச் செய்தார். அதற்கு காரணம் அப்போது தமிழ் அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து எம்.ஜி.ஆரிடம் வைத்த கோரிக்கை, நெருக்குதல்தான். ஆனால் தொடரவில்லை.
பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் கருணாநிதி 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது 'நவம்பர்-1' தமிழ்நாடு நாளை அறிவித்து பெயரளவில் கொண்டாடினார்.
அதற்கு காரணம் ஐயா பெ.மணியரசன் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்கள் தரப்பும் கொடுத்த அரசியல் அழுத்தம்-கோரிக்கையும்தான். பிறகு அதுவும் கிடப்பில் போடப்பட்டது.
இப்படியாக நகர்ந்து
இறுதியாக 2019-ம் ஆண்டு, தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள்இ 'நவம்பர்-1' தமிழர் நாள் என்பது இனி வருடம் தோறும் கொண்டாடப்படும் என்று அரசாணை அறிவிப்பையே செய்தார். இது ஒரு வரலாற்று சாதனை.
தொடர்ந்து 2020 ஆண்டிலும் தமிழ்நாடு நாள் நிகழ்த்தப்பட்டது.
அடுத்து 2021. மே மாதம் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட மாடல் வஞ்சகர் ஸ்டாலின்,
சலசலப்பின்றி, ' நவம்பர் 1 - தமிழ்நாடு நாள்' அரசாணையை ரத்து செய் விட்டார்.
அதற்கு காரணம், அறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று தமிழக சட்டமன்றத்தில் முழக்கமிட்டு அறிவித்தார். அப்படி அறிவித்த ஜுலை - 23 ம் தேதி தான் இனி தமிழ்நாடு நாள் என்றுஇ தமிழறிஞர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று மாற்றப்பட்டது என்றது மாடல் அரசு.
(சுபவீ இ வீரமணி எல்லாம் தமிழறிஞர்கள்?!!)
இது அநீதியான ஒன்று. பிறந்த நாளை தவிர்த்துவிட்டு பெயர் வைத்த நாளை யாராகிலும் கொண்டாடுவார்களா என்ற கேள்வி சீமான், பெ.மணியரசன் உள்ளிட்ட தமிழர் அமைப்புகள் எதிர்தன.
இதிலும்கூட உண்மை இல்லை.
அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே, 1961-ல் தமிழக சட்டப் பேரவையில் காங்.கட்சி தரப்பில் 'தமிழ்நாடு' என தமிழிலும், 'மதராஸ் ஸ்டேட்' என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுவிட்டது.
இவர்களுக்கு இருப்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.
தமிழனுக்கென்று சுய அடையாளம் என ஒன்றும் இருக்கக்கூடாது. எல்லாவற்றையும் குழப்பியடிக்க வேண்டும். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்பவர்கள்தான் இந்த திராவிடர்கள்.
பெத்தவனுக்குத்தான் வலி தெரியும் என்பதை ஆந்திரமும், கர்நாடகமும், கேரளாவும் நிரூபித்தபடியே உள்ளது.
திராவிடர்களுக்கு?.
ஐயா பெ.மணியரசன் - கி.வெங்கட்ராமன் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரியக்கமும் அதன் அரசியல் முன்னெடுப்பும் எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகின்றதா?
சீமான் - நா.த.க பிள்ளைகளின் தமிழ்த் தேசிய ஓட்டரசியல் களம் எவ்வளவு முக்கியம் என்று இப்போது தெரிகின்றதா?
சீமானை குறிவைத்து வீழ்த்த துடிப்பதின் பின் உள்ள அரசியல் இப்போது புரிகின்றதா?
-----------------------
போகட்டும்
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் பிறகாவது தமிழர்களுக்கு மனதார துணை நின்றாரா இல்லை.பிறகும் மனதறிய துரோகம் செய்தபடியே இருந்தார்.
1965-ல் இந்தி திணிப்பு ஆட்சிமொழியாக வருகின்றது. அப்போது காங்கிரஸ் ஆட்சிஇ பக்தவச்சலம் முதல்வர்.
இளைஞர்களின் பேரெழுச்சி கிளர்ச்சியாகிறது. அண்ணாவின் தம்பிமார்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினுள்ளே நுழைந்து கொள்கிறார்கள்.
தமிழ்மொழி காக்கும் போராட்டம் வலுக்கிறது. மாணவர் இராசேந்திரன் தொடங்கி 400-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது அன்றைய காங்கிரஸ் ஆட்சி.
தமிழ் இளைஞர்களின் அந்த உணர்ச்சிமிகு போராட்டத்தை ஈவெரா நாயக்கர்இ 'காலிகளின் போராட்டம்' என்ற தலைப்பிட்டு...
'தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப் படுத்தினார்கள்? பத்திரிகைகார அயோக்கியர்களும்இ பித்தலாட்ட அரசியல்வாதிகளும்இ (திமுக) இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டுஇ எல்லா மக்களும் சிந்திக்காமல்இ 'இந்தி-இந்தி' என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும்இ இத்தனை உயிர் சேதமும்இ உடைமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? பிறகுஇ முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்.? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்' என்று 1965 மே-28. தேதி விடுதலை நாளேட்டில் சூபகுத்தறிவை கொட்டியிருந்தார் நாயக்கர்.
அது மட்டுமல்ல,
'கிளர்ச்சிக்கு தயாராவோம்' என்று வேறு முழங்கி,
'திராவிடர் கழகத்தினர் எல்லாம் கையில் மண்ணெண்ணை, தீப்பெட்டியோடு கிளம்புங்கள். கலவரக்காரர்களை- காலிகளை கண்டால் அந்த இடத்திலேயே அவர்கள் மீது எண்ணெயை ஊற்றிக் கொளுத்துங்கள்' என்று அறிக்கை வேறு விட்டு கொதித்திருந்தார்.
போராட்டம் நடத்திய தமிழர்களை, தமிழ் அறிஞர்களை கொளுத்துங்கள் என்றவர் தான் ஈ.வெ.ராமசாமி.
'எனது இந்தி எதிர்ப்பு என்பது, இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்...ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள்' என்று 27.1.1969- தேதி விடுதலை நாளேட்டில் எழுதினார்.
இந்த தமிழ் வெறுப்புணர்வு, ஈ.வெ.ராமசாமிக்கு இறுதிவரையிலும் இருந்தது.
1968-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, ஏதோ ஒரு பிரச்சனைக்காக, 'தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அமைச்சர் பதவியை தூக்கி எறிவோம்' என்று சும்மா ஒரு வாய் சவடால் அடித்தார்.
2009ல் ஈழ இன அழிப்பை தடுக்க ஆp-க்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என நாடகமாடியது போல தான்.
அப்படியான நாடக பேச்சைக்கூட நாயக்கர் சகித்துக் கொள்ளவில்லை.
உடனே கொதித்து!!!
'எதற்கு பதவியை தூக்கி எறியனும். இதுதான் ஈரோட்டுப் பள்ளியில் கற்ற கல்வியா. நான் நாற்பது வருடமாக கூறி வருகின்றேன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று' என்ற புகழ்பெற்ற பகுத்தறிவு வார்த்தையைக் கொட்டினார். ஆனால் இவர்தான் தமிழ்த் தேசியவாதி.
தமிழ்நாடு என்ற முழக்கத்திலும் பங்கில்லை. மொழி வழி மாகாணப் போரிலும் பங்கேற்கவில்லை. மாநில எல்லை மீட்பு போராட்டத்திலும் பங்கேற்க இல்லை. ஆனாலும் இவர் தான் தமிழர் தந்தை. இவருக்கு தான் ஊர்தோறும் சிலைகள்.
ஈழத்து அடிகளார்,
கி.அ.பெ.விசுவநாதம்
மறைமலை அடிகளார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார்.
ம.பொ.சி.
மார்ஷல் நேசமணி,
உள்ளிட்ட தலைவர்கள் பெயரில் ஒரு நினைவு இடங்களும் இல்லை.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்,
நூற்றாண்டு நினைவு பன்னாட்டு அரங்கம், புதிதாக - பிரமாண்டமாக உதித்த பூங்கா போன்ற எவற்றிற்குமே தமிழர் தலைவர் பெயர்களை வைத்தால், திராவிடர்களுக்கு புத்தி சுளுக்கு வந்து விடும். பேரறிஞர் குணா ஐயா சொன்னதைப் போல், 'திராவிடத்தால் வீழ்ந்தோம்'. இன்னமும் எழவில்லை.
மீண்டும் அந்த வார்த்தை,
'பெத்தவனுக்குதான் தெரியும் வலி. மற்றவனுக்கு தெரியாது. குறிப்பாக திராவிடர்களுக்கும். அவர்களின் ஒட்டுத் திண்ணையில் குடியிருப்பவர்களுக்குமே,...
பா. ஏகலைவன்.
பத்திரிகையாளர்.
01.11.2024இ சென்னை.