யுத்தத்தினை சீனா வலுப்படுத்தி நீடிக்கச்செய்கின்றது! இதற்கான விளைவுகளை சீனா அனுபவிக்கவேண்டும். Jens Stoltenberg!
சீனா இரண்டு தரப்பினையும் திருப்திபடுத்தும் விதத்தில் செயற்படுகின்றது.
சீனா நிறுத்தாவிட்டால் சீனா அதற்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க்!
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர்புட்டினின் உக்ரைன் யுத்தத்தினை சீனா வலுப்படுத்தி நீடிக்கச்செய்கின்றது என குற்றம்சாட்டியுள்ள நேட்டோவின் தலைவர் Jens Stoltenberg இதற்கான விளைவுகளை சீனா அனுபவிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
ரஸ்ய ஜனாதிபதியின் யுத்தத்தினை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை சீனா நிறுத்தாவிட்டால் சீனா அதற்கான விளைவுகளை அனுபவிக்கவேண்டியிருக்கும் என நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்துள்ளார்.
சீனா இரண்டு தரப்பினையும் திருப்திபடுத்தும் விதத்தில் செயற்படுகின்றது புட்டினின்ரஸ்ய யுத்ததத்தி;ற்கு ஆதரவளிக்கும் அதேவேளை ஐரோப்பிய சகாக்களுடன் உறவுகளை பேண முயல்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது நீண்டகாலத்திற்கு நீடிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கு சீனா ஆதரவளித்து வருவது குறித்து நேட்டோ நாடுகள் ஆராய்ந்து வருகின்றன தடைகள் குறித்தும் ஆராய்கின்றோம் என நேட்டோவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யா தனது ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கு அவசியமானஇமைக்ரோ எலக்டிரோனிக்ஸ் தொழில்நுட்பங்களை சீனா ரஸ்யாவிற்கு வழங்கி வருகின்றது இதனை பயன்படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான ஏவுகணைகளை ரஸ்யா தயாரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா தனது நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் ஏதோ ஒரு கட்டத்தில் நேட்டோ சீனாவிற்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது குறித்து சிந்திக்கவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரஸ்யாவிற்கு ஆதரவளிப்பதற்காக சீனா மீது ஏற்கனவே தடைகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.கடந்த மாதம் அமெரிக்கா சீனா ஹொங்கொங்கை சேர்ந்த 20 நிறுவனங்களிற்கு எதிராக தடைகளை விதித்திருந்தது.