Breaking News
வேட்புமனு தாக்கல் செய்வோரை வீடியோ எடுக்கும் புலனாய்வாளர்கள்!
.
வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய வருவோரையும் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து கூறுவதையும் புலனாய்வாளர்கள் வீடியோ எடுக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது.
பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்புமனுக்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருவோரை அங்கு ஊடகவியலாளர்கள் போல் நிற்கும் புலனாய்வாளர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதோடு,வேட்பாளர்களிடம் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை கேட்கும் போது ஊடகவியலாளர்களுடன் இணைந்து நின்று வீடியோ எடுத்தும் வருகின்றனர்.