நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 4 வது தவணைக்காலத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு 29/11,30/11,01/12
.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
4 வது தவணைக்காலத்தின் 2 வது நேரடி அரசவை அமர்வு 29/11,30/11,01/12 ஆகிய திகதிகளில்
பரிஸின் புறநகர் பகுதியில்
Mairie de Le Blanc Mesnil
1 Place Gabriel Péri
93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளது.
29/11 வெள்ளி காலை நடைபெறும் அங்குரார்ப்பண நிகழ்வில் நகரபிதாக்கள்,நகரசபை உறுப்பினர்கள்,தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,பிரெஞ்சு வழக்கறிஞர்கள் வாழ்த்துரைகளையும், கருத்துக்களையும் வழங்க உள்ளனர்.
வெள்ளி மாலை பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் அமர்வு நடைபெற உள்ளது.
இவ் அமர்வில் பிரெஞ்சு நாடாளுமன்ற பிரதிநிதிகள், பிரெஞ்சு சட்டவாளர்கள், இளம் தமிழ் சட்டவாளர்கள்,இவர்களோடு நா.க.த.அரசாங்கத்தின் பிரதமர்
வி.ருத்திரகுமாரன் பங்கெடுக்கும் அரங்குகள், ஆய்வுகள் நடைபெற உள்ளது.
30/11 சனிக்கிழமை மாலை 18.30 மணிக்கு
5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பன்னாட்டு அரசியல்,சமூக அமைப்புகளின் பங்களிப்புக்கள், கலைநிகழ்வுகள் நடைபெறும். இந்நிகழ்வில்
தந்தை செல்வா,நெல்சன் மண்டேலா,மாமனிதர் துரைராஜா,
தியாக தீபம் திலிபன் நினைவு விருதுகள்,மற்றும் இளம் தலைமத்துவத்திற்கான விருது என்பன தேர்வாளர்களுக்கு வழங்கி
கௌரவிக்கப்பட உள்ளன.
அத்தோடு இந்நிகழ்வில் தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணியினரும்
கௌரவிக்கப்படுகின்றனர்