Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு நிச்சயம் இடமளிக்கும்! அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நம்பிக்கை

.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதற்கு அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம் என  அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தெரிவித்தனர்.

ஊடக சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் பல தடைகளுக்கு மத்தியிலும்  சிறப்பாக நடாத்தி வந்தோம்.

அந்த வேளையில் சில  அரசியல்வாதிகள் வந்து  இந்த நிகழ்வை நாங்கள் தான் செய்கிறோம் என்று தம்பட்டம் அடிப்பார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து கஜேந்திரகுமாரின் சைக்கிள் சின்னகாரர்கள்  மாவீரர் துயிலும் இல்லத்திற்கு வந்து இதனை செய்வார்கள்.

கடந்த வருடம் ஒரு நபரை வைத்து  இந்த மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தலை குழம்பினார்கள்.அதனால் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. 

27ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வை செய்வதற்கு  சிரமதானம் செய்து ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றோம்.

எனவே இந்த அரசியல் கட்சிகள் வந்து பொய்யான அரசியல்  பிரச்சாரங்கள் செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

மேலும் எதிர்வரும் கார்த்திகை 27 அன்று நாங்கள் இந்த புண்ணிய பூமியில்  எங்களது சரீரத்தின் ஒரு பாகமாக எங்களுக்காக மண்ணில் மடிந்த மாவீரர்களை நாங்கள் நினைவு கூருவதற்கு காத்திருக்கின்றோம்.  மக்களும் எங்களோடு ஒன்று சேருங்கள். என அழைப்பு விடுத்தார்.