“இதோ ஒரு நற்செய்தி“ ரணிலிடமிருந்து இல்லை; வெளியான அதிர்ச்சி தகவல்.
.
தொலைகாட்சிகள், இணையதளங்கள் மற்றும் சமூக வலையதளங்களிலும் இந்த சுவரொட்டிகள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக மேற்கொள்ளப்பட்ட விளம்பரமாகவே இதனை அனைவரும் அவதானித்தனர்.
ஆனால், இந்த விளம்பரங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களாகும். இன்றைய தினமும் சில சுவரொட்டிகள் கொழும்பின் புறநகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் “பொதுஜன பெரமுனவில் இருந்து ஒரு வேட்பாளர்“ என எழுதப்பட்டுள்ளது.
இந்த விளம்பரங்கள் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பிரசாரங்களாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவிடம் இந்த விளம்பரங்கள் குறித்து “ஒருவன் செய்தி சேவை“ வினவிய போது, அவை ஜனாதிபதி செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்கள் அல்ல எனத் தெரிவித்தது.
இன்று இரவு 8 மணிக்கு ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்த உள்ளமை குறிப்பித்தக்கது.