Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அம்பலாங்கொடையில் அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பு கண்டுபிடிப்பு

.

அம்பலாங்கொடை, வத்துகெதர , ஆதாதொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் முற்றத்திலிருந்து அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பு ஒன்று பிரதேசவாசிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த இளஞ்சிவப்பு நிற நாகப்பாம்பானது 18 அடி நீளமுடையது ஆகும்.

இந்த நாகப்பாம்பு தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் அதிகாரிகள் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இந்த அரியவகை இளஞ்சிவப்பு நிற நாகமானது நாட்டில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

பல ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் இவ்வாறான அரியவகை நாகப்பாம்புகள் பிறக்கும்.

எனவே, இதனை வனப்பகுதியில் விட்டுவிடாமல் பாதுகாப்பாக தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் வைத்திருப்பது அவசியமாகும்.

ஏனெனில், வனப்பகுதியில் உள்ள ஏனைய மிருகங்கள் இந்த அரியவகை நாகப்பாம்பை வேட்டையாடுவதற்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.