Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து!

மாணவர்கள் தான் எமது சமூகத்தின் உண்மையான நம்பிக்கையும் எதிர்காலத் தூண்களும் ஆவர்.

பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு இளங்குமரன் எம்.பி. வாழ்த்து!
கிளிநொச்சி மாவட்ட ரீதியில் வர்த்தகப் பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று சிறப்புச் சாதனை படைத்துள்ள பூநகரி கிராஞ்சி மாணவனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் எம்.பி. தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.  இம்மாணவன் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், வாழ்க்கையின் பல்வேறு சவால்களையும் கடந்து, கடின உழைப்பும் உறுதியும் கொண்டு இவ்வளவு உயர்ந்த பெறுபேற்றை அடைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.பொருளாதார குறைபாடுகள், வசதியின்மை, மற்றும் பல தடைகள் இருந்தபோதிலும் கல்வியை மட்டுமே தனது முன்னேற்றப் பாதையாகக் கொண்டு தீவிர முயற்சியால் இச்சாதனையை எட்டியுள்ளார்.

இவ்வாறான மாணவர்கள் தான் எமது சமூகத்தின் உண்மையான நம்பிக்கையும் எதிர்காலத் தூண்களும் ஆவர். அவரின் முயற்சி, உறுதி, மற்றும் கல்வி மீது கொண்ட அர்ப்பணிப்பு இன்றைய இளைஞர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைகிறது.
இந்த மாணவன் எதிர்காலத்தில் பல்கலைக்கழகக் கல்வியை வெற்றிகரமாக நிறைவு செய்து, அறிவு, ஒழுக்கம், மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட ஒரு சிறந்த நபராக உருவெடுத்து, தமது சமூகத்திற்கும் நாட்டிற்கும் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என இளங்குமரன் எம்.பி. தனது வாழ்த்துக்களுடன் நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.