நெதர்லாந்தின் தலைநகரில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்!
.
நெதர்லாந்தின் தலைநகரில் நேற்று இரவு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர்,
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள மக்காபி டெல் அவிவ் கால்பந்து அணியின் ரசிகர்கள், கால்பந்து விளையாட்டு முடிவடைந்த பின்னர் இரவோடு இரவாக உள்ளூர் மக்களால் துன்புறுத்தப்பட்டு, கொள்ளையடிக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டதாக, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir நெதர்லாந்து உள்துறை அமைச்சரை அழைத்து முறையிட்டள்ளார். நெதர்லாந்திற்கான இஸ்ரேல் தூதர் ஆம்ஸ்டர்டாம் மேயரை சந்தித்து விபரங்களை கூறிவருகிறார்.
டச்சு தலைநகரின் பல பகுதிகளில் யூத படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல டஜன் கைதுகள் பதிவாகியுள்ளன.நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்கள் மீதான 'ஆண்டிசெமிடிக் தாக்குதல்களை' கண்டனம் செய்துள்ளார், மற்றும் நகரம் இப்போது 'அமைதியாக' இருப்பதாகவும் கூறியுள்ளார்.
62 பேர் கைது செய்யப்பட்டதாகவும்இ ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாலஸ்தீனிய ஆதரவாளர்களுக்கும் மக்காபி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில்இ போட்டிக்கு முன்னதாகஇ டேம் சதுக்கத்தில் கைதுகள் நடந்தன.
இஸ்ரேலிய ரசிகர்கள் பட்டாசு வெடித்ததாகவும்இ அரேபியர்களுக்கு எரிராக இனவெறிக் கோஷங்களை எழுப்பியதாகவும்இ அவர்கள் மீதான தாக்குதலுக்கு முன்னதாக பாலஸ்தீனக் கொடியைக் கிழித்ததாகவும் செய்திகளும் காணொளிக் காட்சிகளும் வெளியாகி இருந்தன.