Breaking News
அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது!
.
மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் சக்திவாய்ந்த அரசியல்வாதியை அவதூறாகப் பேசுவது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன.
கைது செய்யப்பட்ட சுமனரதன தேரரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.