Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனடாவின் குடிவரவு, ஏதிலி கோரிக்கை நடைமுறைகளில் மேலும் சில மாற்றங்கள்!

.

கனடாவின் குடிவரவு மற்றும் ஏதிலி கோரிக்கை நடைமுறைகளில் மேலும் மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.கனடாவின் குடிவரவு ஏதிலிகள் விவகார அமைச்சர் மார்க் மில்லர் இந்த முன்மொழிவினை சமர்ப்பித்துள்ளார். எதிர்வரும் வாரங்களில் இந்த முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அண்மையில் கனடிய மத்திய அரசாங்கம் நிரந்தர வதிவிட உரிமையாளர்கள் தொடர்பில் பல்வேறு கடுமையான நடைமுறைகளை அறிமுகம் செய்திருந்தது.குறிப்பாக தற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் தொடர்பிலும் கடுமையாக்கப்பட்ட சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்நிலையில், கனடாவில் ஏதிலி கோரிக்கையாளர் ஒருவரின் விண்ணப்பம் பரிசீலனை செய்வதற்கு 44 மாதங்கள் சராசரியாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது என கனடிய புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.கனடிய ஏதிலி கோரிக்கை நடைமுறை உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என மில்லர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த முறையில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் சில மாற்றங்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் மில்லர் குறிப்பிட்டுள்ளார்.