Breaking News
நல்லூர் திருவிழா: தங்க ரதத்தில் காட்சியளித்த கந்தன்
.
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு 21ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றிருந்தது.
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தின் 21ஆம் திருவிழாவான தங்கரத திருவிழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி தெய்வானை சகிதம் உள்வீதியுலா வந்து , தொடர்ந்து தங்கரதத்தில் எழுந்தருளி அடியார்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.