Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவர் - ஜனாதிபதி அதிரடி!

விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டஅமுலாக்க நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம்.

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களது பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பயன்படுத்திய 

மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  

மாகாண சபைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கிலிருந்து அநாவசியமாகப் பணத்தை பெற்று அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியமைக்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

அந்த வங்கிக் கணக்கை நிறைவுறுத்தி பணம் பெறுமாறு தாமே அவருக்கு அறிவுறுத்தல் வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுகிறார். 

அவ்வாறெனில் தற்போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருமாறு அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 

முன்னைய காலங்களில் இவ்வாறான உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்பட்டது. தற்போது அதனை நாம் மாற்றியுள்ளோம். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கோ, கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கோ வராதவர்கள் தற்போது விசாரிக்கப்படுகின்றனர். 

விசாரணைகளை முன்னெடுக்க உரிய சட்டஅமுலாக்க நிறுவனங்களுக்கு நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம். 

முன்னர் காவல்துறையினருக்கு பயந்து குற்றவாளிகள் தலைமறைவாகினர். 

தற்போது முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது பொலிஸ் மா அதிபரே தலைமறைவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.  

அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடைசெய்யப்பட்டிருந்த போதிலும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் வாகனங்களைக் கொண்டுவந்தனர். 

அவர்கள் அத்தகைய வாகனங்களைப் பதிவுசெய்யாமல் பயன்படுத்தினர். அதிகாரத்தில் இருந்தவர்கள் சட்டத்துக்குக் கட்டுப்படவில்லை.  

எனவே, அவ்வாறு சட்டவிரோதமாக வாகனங்களைப் பயன்படுத்திய சிலர் விரைவில் கைதுசெய்யப்படவுள்ளனர். அவ்வாறானவர்களின் பெயர்கள் அடங்கிய நீண்ட பட்டியலொன்று உள்ளது. 

இது அரசியல் பழிவாங்கல் அல்ல, நாம் சட்டத்தை முறையாக செயற்படுத்துகிறோம் என்பதையே இது காட்டுகிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.