பலதும் பத்தும்:- 15,04,2025 - புத்தாண்டு காலத்தில் அதிகரித்த போக்குவரத்து சேவை 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளது.
சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு காலத்தில் அதிகரித்த போக்குவரத்து சேவை காரணமாகும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) கடந்த நான்கு நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை பொது மேலாளர் ஆர்.டி. சந்திரசிறி தெரிவித்துள்ளார். தினசரி வருமானம் சுமார் ரூ. 200 மில்லியனை எட்டியுள்ளது. பருவகால தேவையை பூர்த்தி செய்வதற்காக, நாடு முழுவதும் சுமார் 350 கூடுதல் பேருந்துகளை இயக்கப்பட்டு, விடுமுறை காலத்தில் பயணிகளுக்கு மேம்பட்ட பயண வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) அவரது சட்டத்தரணி என்ற வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சந்திக்க முன்வைத்த கோரிக்கையினை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) கலைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம்| கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும்.
நாட்டின் இருவேறு பகுதிகளில் இன்று (15) இடம்பெற்ற விபத்துகளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, இன்று அதிகாலை, தம்புள்ளையிலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற கெப் வாகனம் ஒன்று எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
பூசா சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் சிறிதத் தம்மிக்கவின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர், போலி பயண ஆவணங்களுடன் தாய்லாந்துக்கு செல்ல முயன்றபோது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.மஹியங்கனையில் உள்ள "கெவல் விஸ்ஸ" பகுதியில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.