Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு வெற்றி பெறுவோருக்கு - இந்தியாவில் பாடும் வாய்ப்பு!

,

யாழ். இசை கலையகம் நடாத்தும் “மாபெரும் சிலோன் சிங்கர் தேர்வு” போட்டியில் வெற்றி பெறும் வெற்றியாளர்களை இந்தியா  அனுப்பி போட்டிகளில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கவுள்ளதாக பிரபல தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில்  நடைபெற்ற குறித்த நிகழ்வில் 60க்கும் மேற்பட்ட பாடகர்கள் கலந்து கொண்டு தமது  திறமைகளை வெளிப்படுத்தினர்.

அதில் முதல் சுற்றில் தெரிவான பாடகர்களுக்கு இரண்டாம் சுற்று நடைபெற்று, இறுதி சுற்று நான்காம் மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் ஞானப்பிரகாசம் சுலக்சன் கலந்து கொண்டு உரையாற்றும் போது, 

எமது பிரதேச பிள்ளைகளின் திறமைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வருவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் அவசியமாகும். அந்த வகையில் இந்த நிகழ்வினை நடத்துபவர்களுக்கு எனது பாராட்டுக்கள். 

இதில் பலர் மிக நன்றாக பாடியுள்ளனர். சிலரின் பாடல்களை கேட்கும் போது என்னையறியாமலே கண்ணீர் வந்தது.  அந்த பாடல்கள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தின. இங்கு பாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் , பாராட்டுக்களும்.

பிள்ளைகள் இந்த மேடையுடன் மாத்திரம் நின்று விடாது தமது திறமைகளை மேம்படுத்தி பல மேடைகள் காண வேண்டும் என வாழ்த்துகிறேன். 

தலைப்பினை இரவல் வேண்டாமல் தமிழ்ப்  பாடகர் போட்டி  என வைத்திருக்கலாம்.