Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை மீளப்பெற்றதா அதானி குழுமம்?

,

மன்னாரிலும், பூநகரியிலும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டமொன்றையும், மின் விநியோகக் கட்டமைப்பொன்றையும் உருவாக்கும் பணியை இந்தியாவின் அதானி குழுமம் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்தின் அனுமதி மற்றும் தீர்மானங்களில் ஏற்படும் தாமதங்களே விலகுவதற்கான காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் இந்திய குழுக்களுக்கு இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிவும் இறுதி முடிவு தாமதமாவதால்,மரியாதையுடன் விலக முடிவு செய்துள்ளதாக அதானி குழுமம் இலங்கை முதலீட்டு சபைக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் அவரது குழுவினரும் அதானி திட்டம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.

அந்த குழுமம் மீது அமெரிக்காவில் பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில் அதானி விவகாரம் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்காகக் காத்திருப்பதாகவும், அதன் பிறகு மேலும் முடிவெடுப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கூறியிருந்தது.எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதி பதிலளிக்கவில்லை.