Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக இசைக்கப்பட்ட திருவெம்பாவை பாராயணம்!

.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் 5 ஆவது வருடமாக நேற்று (04) திருவெம்பாவை பாராயணம் இசைக்கப்பட்டது. 

பரமேஸ்வரா ஆலயத்திலிருந்து ஆரம்பித்து கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியினைக் கடந்து தபாற்பெட்டிச் சந்தி ஊடாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. 

மேற்படி பாராயணத்தில் யாழ். இந்து மன்ற பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான சி.ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான சு. கபிலன் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஒவ்வொருநாளும் திருவெம்பாவை பாராயணம் இடம்பெற்று இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா முன்றலில் இருந்து மாணிக்கவாசகர் எழுந்தருளி யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம், திருநெல்வேலி சந்தி, பரமேஸ்வரா சந்தி ஊடாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தினை வந்தடையும்.

திருவெம்பாவை விரத நாளினை முன்னிட்டு கடந்த 2022 ஆண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கபட்ட மார்கழி விழாவும் சிறப்புற இடம்பெறவுள்ளது.