Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நடிப்பில்மிரட்டிய விக்ரம்! முதல்நாளில் இத்தனை கோடிகள் வசூலா? ராயனை பின்னுக்குத்தள்ளி தங்கலான் சாதனை!

பா ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் வெளியானது.

நடிகர் விக்ரமின் தங்கலான் பட முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி, ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

பா ரஞ்சித் – விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் நேற்று வெளியானது. விக்ரம் மட்டுமல்லாது, பார்வது,

பசுபதி, மாளவிகா மோகனன் என நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்ததாக படம் பார்த்தவர்கள் சிலாகித்து வருகின்றனர்.

இதைவிட சுவாரஸ்யம் என்னவெனில், தங்கலான் படத்தைப் பார்க்க, தங்கலான் கெட்டப்பிலேயே தியேட்டருக்குச் சென்று பலரும் படம் பார்த்தனர். ஒருசிலர் தியேட்டர் நிர்வாகிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஒவ்வொரு படத்திற்கும் தன்னால் முடிந்த அத்தனை உழைப்புகளையும் கொட்டி நடித்து வரும் விக்ரமுக்கு, கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை.

அப்படி இருக்க, ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் உருவாவதாக வெளியான அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியது. கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே மாறியிருக்கிறார் விக்ரம்.

சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது.

நடிகர்களின் பங்களிப்பு சூப்பர், கதை மற்றும் திரைக்கதையில் சற்று சொதப்பல் இருப்பதாகவே விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படியானாலும் வசூல் ரீதியாக விக்ரமுக்கு பெரிய ஓபனிங் ஆக அமைந்துள்ளது தங்கலான். ஆம், வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது.

அதில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 26. 44 கோடி ரூபாயை தங்கலான் வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே வசூல் ரீதியாக தாண்டவமாடிய ராயனை விட முதல் நாளில் அதிக வசூலை பெற்றுள்ளார் தங்கலான்.

வட இந்தியாவில் ஆகஸ்ட் 30ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், வசூல் தொடர்ந்து ஏறு முகத்தில் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.