Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கை- இந்தியா இடையே பாலம் அமைத்தால் இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சினைகள் ஏற்படும்

.

 

இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால் இலங்கையின் இறையாண் மைக்குப் பிரச்சினைகள் ஏற்படும் என இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி உலகளாவிய கரோனா பரவல், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அரசு இருக்கிறது. இதனால் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுக்காக இலங்கையில் இருந்து தமிழகப் பகுதிகளுக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தை விரிவுபடுத்த அந்நாட்டு அரசு முக்கியத்து வம் கொடுத்து வருகிறது.

மேலும், இந்தியா – இலங்கை அரசுகள் இடையே தனுஷ்கோடியில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கு கடல் வழியாக பாலம் அமைக்கும் திட்டம் குறித்து விரைவில் ஆய்வுப் பணிகள் நடைபெற உள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து இலங்கையின் கத்தோலிக்க கார்டினல் மால்கம் ரஞ்சித் கூறியதாவது: பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய மன்னர்கள் படையெடுப்பு நடத்தி இலங்கையின் சில பகுதிகளை ஆண்டுள்ளனர். அந்தப் பகுதிகளை மீட்க இலங்கை மன்னர்கள் படைகளைத் திரட்ட வேண்டியிருந்தது. சுதந்திரம் பறிபோகும் இந்தியா – இலங்கை இடையே பாலம் அமைக்கப்பட்டால், இலங்கையின் இறையாண்மைக்கு பிரச்சினைகள் ஏற்படக் கூடும். மேலும், இலங்கையின் சுதந்திரமும் பறி போகும். இன்னும் சொல்லப் போனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதியாக இலங்கை மாறிவிடும்.

இந்த பாலம் அமைக்கும் திட்டத்தை இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்க்க வேண்டும். அதுபோல, இந்தியர் களும் இதனை எதிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.மால்கம் ரஞ்சித்