Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

மக்கள் ஆணையால் தமிழரசு மீள நிமிரும்; சிறீதரன் தெரிவிப்பு!

.

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு மக்கள் வழங்கப்போகும் ஆணைதான், எமது மக்கள் விரும்பும் வகையிலான கட்சியின் மீளெழுச்சிக்கு வித்திடும் என நாடாளுமன்ற முன்னாள்  உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரான சிவஞானம் சிறீதரன் அவர்களை ஆதரித்து, வன்னேரிக்குளம் வட்டாரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இதுவரை காலமும் தமிழ் மக்களின் அரசியல் வெறுமையின் வடிகாலாக, தமிழ்த்தேசிய அடையாளமாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இருந்து வந்ததைப் போலவே, உட்கட்சி விரிசல்களை சீரமைத்து, எமது மக்களின் அரசியல் அடையாளமாக கட்சியை மீளக்கட்டியெழுப்பும் காலப் பணி எமக்கிருப்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

அத்தகைய பணிகளை நாம் ஆற்றுவதற்கு, எதிர்வரும் தேர்தலில் மக்கள் எமக்கு வழங்கப் போகும் ஆணையே உந்துசக்தியாக மாறும். இதனை உணர்ந்த எமது மக்களின் தெரிவுகள் அரசியல் அறம் சார்ந்தும், தமிழ்த்தேசியக் கொள்கை சார்ந்துமே அமையும் – என்றார்.