Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

இலங்கை உள்ளிட்ட 50 நாடுகளில் , இஸ்ரேல் படையினருக்கு எதிராக முறைப்பாடுகள்!

.

இஸ்ரேலிய படையினர் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி, பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் இலங்கை உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 50 முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும் இதுவரை எந்த கைதுகளும் பதிவு செய்யப்படவில்லை என்று இஸ்ரேலின் பொது ஒளிபரப்பு நிறுவனமான KAN தெரிவித்துள்ளது.

இந் நிலையில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நாடுகளின் பெயர்களையும் இக் குறித்த ஊடகம் குறிப்பிடவில்லை.

எனினும் , தென்னாப்பிரிக்கா, இலங்கை, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இஸ்ரேலிய வீரர்கள் மீது முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டதாக இஸ்ரேலிய நாளிதழ் ஹாரெட்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை இராணுவத்தின் தகவல் பாதுகாப்புத் துறையை மேற்கோள் காட்டி, இஸ்ரேலிய வீரர்கள் காசாவில் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதை ஆவணப்படுத்தும் சமூக ஊடக தளங்களில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 1 மில்லியன் பதிவுகளை வெளியிடுவதாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளதுஇந்தநிலையில், குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணத்தைத் தடை செய்ய அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், பிரேசிலில் விடுமுறையில் இருந்த இஸ்ரேலிய ரிசர்வ் படை வீரர் ஒருவர், காசாவில் போர்க்குற்றங்களுக்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்ட பின்னர், அந்த நாட்டை விட்டு வெளியேறியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.