'வன்னிக்காடு'! - இந்த உலகம் ஒரு அறமான இனத்தை அழித்ததை வேடிக்கை பார்த்த நாடுகளும் வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் சிந்தும் படைப்பாக நிச்சயம் அமையும்.
இனி வரும் என் ஆயுள் முழுக்க அதற்காகத்தான்! - இயக்குநர் வ.கௌதமன்.

'சந்தனக்காடு' முடித்துவிட்டு 'வன்னிக்காடு'தான் கொண்டு வர விரும்பினேன். தலைவர் பிரபாகரனின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைத் திரட்டவும், கருப்பொருள்களைத் திரட்டவும் ஐ.நா-வுக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன். கென்யா, சுவிஸ், கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி எனப் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். 15 ஆண்டுகளாக சம்பவங்களைத் தேடித்தேடிக் கோத்துக்கொண்டிருக்கிறேன். இந்த உலகம் ஒரு அறமான இனத்தை அழித்ததை வேடிக்கை பார்த்த நாடுகளும் வெட்கித் தலைகுனிந்து கண்ணீர் சிந்தும் படைப்பாகவும், தமிழனின் மாண்பை உச்சமாகக் கொண்டு வரும் படைப்பாகவும் அது நிச்சயம் அமையும். இனி வரும் என் ஆயுள் முழுக்க அதற்காகத்தான்!''
"முன்பு சந்தனக்காடு... இப்போ முந்திரிக்காடு... அடுத்து வன்னிக்காடு!''
என் அப்பா வடமலை, ஒரு போராட்டவாதி. தோழர்கள் புலவர் கலியபெருமாள், தமிழரசன் இவர்களின் உயிர் நண்பர். கம்யூனிசக் களத்தில் தீவிரமாக இயங்கியதால் என் குடும்பம் பாதிக்கப்பட்டு தலைமறைவாகவும் இருந்தது
''என் முந்தைய படம் 'மகிழ்ச்சி'க்குப் பிறகு இந்த மண்ணுக்காகப் போராடுவது என்று தீவிரமாக இறங்கிவிட்டேன். கதிராமங்கலம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் அத்துமீறல்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும் கத்திப்பாரா பாலத்திற்குப் பூட்டு போட்டும் போராடினேன். ஜல்லிக்கட்டுக்காக மதுரை அவனியாபுரத்தில் ரத்தம் சிந்தினேன். இந்த மக்களுக்காக நின்றதை இப்பொழுதும் சந்தோஷமாக நினைக்கிறேன். என் படைப்புகள் ஒவ்வொன்றும் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும், உறவுகளின் உன்னதத்திற்காகவுமே இருந்திருக்கிறது. இந்த மண்ணுக்கான எழுச்சியை உண்டாக்குவதில் முனைப்பாக நிற்கிறேன். 'படையாண்ட மாவீரா' படம்இ முந்திரிக்காட்டு வரலாற்றைச் சொல்கிறது. தமிழ்ச் சமூகத்துக்கு ஒரு உற்சாகத்தையும் உந்துசக்தியையும் தரும் என்ற நம்பிக்கையோடு இயக்கிவருகிறேன்'' - திடமாகவும் கவனமாகவும் பேசுகிறார் இயக்குநர் வ.கௌதமன். இதற்கு முன் 'கனவே கலையாதே'இ 'மகிழ்ச்சி', வீரப்பனின் 'சந்தனக்காடு' தொடர் மூலம் அதிகம் அறியப்பட்டவர்.
'கனவே கலையாதே'வில் இயக்குநராக இருந்த நீங்கள்இ நடிகராகவும் ஆனது ஏன்?''
''என் அப்பா வடமலை, ஒரு போராட்டவாதி. தோழர்கள் புலவர் கலியபெருமாள், தமிழரசன் இவர்களின் உயிர் நண்பர். கம்யூனிசக் களத்தில் தீவிரமாக இயங்கியதால் என் குடும்பம் பாதிக்கப்பட்டு தலைமறைவாகவும் இருந்தது. இப்போதெல்லாம் பிறந்த குழந்தைகளே செல்போன் பார்க்கிறார்கள். ஆனால், நான் என் ஒன்பது வயதில்தான் சினிமாவைப் பார்த்தேன். விஜயகாந்த் நடித்த 'சிவப்பு மல்லி' படத்துக்கு அப்பா அழைத்துச் சென்றார். அதில் இடம்பெற்ற 'எரிமலை எப்படிப் பொறுக்கும்... நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம்' பாடல் எனக்குள் தாக்கத்தை ஏற்பத்தியது. கம்யூனிச சித்தாந்தத்தோடு வளர்க்கப்பட்டதால், விஜயகாந்த் மீது ஒரு பெரும் ஈர்ப்பு ஆனது. விஜயகாந்த் மாதிரி நடிக்க வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். வந்த சிறிது நாள்களில் வாசிப்பு தீவிரமாகி உதவி இயக்குநரானேன். முதல் படமே நான் நடித்து இயக்குவதாகத்தான் இருந்தது. அது சாத்தியமின்றிப் போகவே, இயக்குநராக மட்டும் அறிமுகமானேன்.''
இந்தப் படத்தில் யாருடைய வரலாற்றைத் தொட்டிருக்கிறீர்கள்?''
''வீரப்பன் வரலாற்றை 'சந்தனக்காடு' மூலம் எடுத்தேன். அடுத்து முந்திரிக்காட்டு வரலாற்றை எடுக்க விரும்பினேன். 12 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி 'படையாண்ட மாவீரா'வைக் கொண்டு வருகிறேன். இந்தப் படம் பேரதிர்வை ஏற்படுத்தும் என திடமாக நம்புகிறேன். பெண் இனத்தின் உரிமைக்காகவும், இந்த மண்ணிற்காகவும் போராடிய ஒருவரின் உண்மை வரலாறுதான் இந்தப் படம். முந்திரிக்காட்டில் ஈரமும் வீரமும் அறமும் சுமந்து நின்ற ஒருவரின் வரலாற்றை அழுத்தம் திருத்தமாகவும், கமர்ஷியல் கலந்தும் சொல்லியிருக்கிறேன். அத்துமீறும் கூட்டத்தை அடித்து அந்த மண்ணுக்குள்ளாகவே புதைத்த ஒரு வரலாறு இது. அதிகாரவர்க்கத்தை எதிர்த்து நின்று தவிடுபொடியாக்கிய கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.
இந்தப் படத்தை வி.கே.புரொடக்ஷன் குழுமம் சார்பில் 7 பேர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். கிரவுடு பண்டிங் முறையில் இந்தப் படம் கூடி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஏழாயிரம் மக்கள் சிறுசிறு தொகையாக தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை இதற்காகக் கொடுத்திருக்கிறார்கள். படைப்புக் களத்தில் என்னுடைய நேர்மையையும், போராட்டக் களத்தில் எனது நேர்த்தியையும் பார்த்த பிறகு பொதுமக்கள் இந்தப் பண உதவியையும் அளிக்க முன்வந்தார்கள்.''
"பெரிய டீமுடன் வருகிறீர்கள் போலிருக்கிறதே...''
''கதைக்கு வலுச்சேர்க்கும் கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மன்சூரலிகான், 'ஆடுகளம்' நரேன், இளவரசு, 'பாகுபலி' பிரபாகர், 'வேதாளம்' கபீர், மதுசூதனராவ், தீனா, ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது. என் ஜோடியாக பூஜிதா நடித்திருக்கிறார். தனுஷின் 'இட்லி கடை'யில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்து வரும் என் மகன் தமிழ் கௌதமன், இதில் இளவயது 'படையாண்ட மாவீரனாக' வாழ்ந்திருக்கான். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி அவரது உயரத்தைப் போலவே மனதிலும் உயர்ந்து நிற்கிறார். அதைப் போலஇ இன்று பிசியாக நடித்துவரும் ரெடின் கிங்ஸ்லி, சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் 15 நாள்களுக்கு மேலாக நடித்து எங்களை நெகிழ வைத்திருக்கிறார்.
'அசுரன்' படத்தின் 'எள்ளு வய பூக்கலையே' பாட்டுக்கு நான் பெரும் ரசிகன். இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் தான் இசையமைக்க வேண்டும் என விரும்பினேன். அவர், அற்புதமான ஐந்து பாடல்களை அள்ளிக் கொடுத்து விட்டார். புரட்சிகரமான, நெருப்பான வரிகளை எழுதியிருக்கிறார் வைரமுத்து. தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகம்மதுஇ ஸ்டன்ட் சில்வாவின் ஆக்ஷன்இ தினேஷ் மாஸ்டரின் நடனம் என ஒரு பெரிய டீமின் ஒத்துழைப்பு திரையில் வியக்க வைத்திருக்கிறது.''
"பழ.நெடுமாறன் எழுதின 'பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்' புத்தகத்தை அடிப்படையாக வைத்து பிரபாகரனின் வரலாற்றைப் படமாக எடுப்பதாக அறிவித்தீர்களே..?''
''உண்மைதான்..."