Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் ஆரம்பமாகவுள்ள தமிழ் பண்பாட்டு அனைத்துலக மாநாட்டு!

,

இலங்கையில்  ஆரம்பமாகவுள்ள தமிழ் பண்பாட்டு அனைத்துலக மாநாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளும் இந்திய பிரமுகர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.
தமிழ் நாடு  திருநெறிய சைவ சமய பாதுகாப்பு  பேரவையின் தலைவர் கா.சசிகுமார் தலைமையில் சற்று முன்னர் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை வந்தடைதனர்.
நாளை 30 ஆம் திகதி யாழிலும்,02 அம் திகதி நுவரெலியாவிலும்,எதிர்வரும் 6 ஆம் திகதி கொழும்பிலும் மேற்படி நிகழ்வுகள் நடை பெறவுள்ளது.

அதே வேளை இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு தமிழ் நாடு  கவிமலர்கள் பைந்தமிழ் சங்க நிறுவுனர் மற்றும் தலைவர்,சந்திரகலா பதிப்பகம்,ஆதி டிரஸ்ட் உரிமையளார் கவிஞர் ரித்து சூரியா மற்றும்,பட்டின்ற பேச்சாளர்,எழுத்தாளர்,மனிதவள மேம்பாட்டு பயிற்றுவிப்பாளருமான தமிழ் செம்மல்  கவிரிசி மகேசு ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி நிகழ்வுகளில் கலந்து பொருட்டு இலங்கையினை வந்தடைந்துள்ளனர்.

இறுதி நாள் நிகழ்வு எதிர்வரும் 6 திகதி கொழும்பு மயுராபதி கேட்போர் மண்டபத்தில் இலங்கையின் முக்கிய அரச பிரதி நிதிகளின் பங்களிப்புடன் இடம் பெறவுள்ளதாகவும்,இதில் பலர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் கா.சசிகுமார் மேலும் கூறினார்.