Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும். 29.11,2025 - நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை!

யாழ்-கொழும்பு தரைவழி பயணத்துக்கு எந்த விதமான வழியும் இல்லை.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் 130 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
காணாமல் போனோரை மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ்-கொழும்பு!
யாழ்-கொழும்பு தரைவழி பயணத்துக்கு  எந்த விதமான வழியும் இல்லை.
லகசபானா மற்றும் காசல்றீ வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களனி கங்கை பெருக்கெடுப்பதால் பாதி வழியில் உள்ளவர்கள் உடன் மீள இருந்த இடங்களுக்கு செல்லுங்கள்.
குறிப்பாக கொழும்பு பக்கம் இருந்து யாழ்வர உள்ளவர்கள் கொழும்பில் அல்லது நீர்கொழும்பு தாண்டி வெள்ள அபாயம் அற்ற பாதுகாப்பான இடத்திற்கு விரைவாக செல்லுங்கள்.
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்று பாதிவழியில் உள்ளவர்கள் மீள யாழ் விரையுங்கள்.
அவசரகால நிலை, களனி கங்கை நீர்வரத்தை கொண்டே பெரும்பாலும் விடுக்கப்பட்டிருப்பதால் அடுத்த 24 மணித்தியாலத்துக்கு கொழும்பு நோக்கி அல்லது கொழும்பில் இருந்து வடக்குக்கான பயணங்களை தவிருங்கள்.

மாங்குளம் புதிய கொலனி
மாங்குளம் புதிய கொலனியிலிருந்து வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கியுள்ள 37 குடும்பங்களை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் பார்வையிட்டார்.
அம்மக்களுக்கு
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிளரால் ஒருதொகுதி உலர்உணவுபொருட்களும் 5 தறப்பாள்எளும் அம்மக்களுக்காக கிராமசேவையாளரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
கட்சியின் மாங்குளம் பிரதேச அமைப்பாளர் பிறேம் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுயாத்தன் மற்றும் கட்சியின் செயலாளர் ஆகியோரும் உடனிருந்தனர்.

குருநாகல் மாவட்டத்தில் மண்சரிவு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 10 பேர் தொடர்பில் எதுவித தகவலும் வெளியாகவில்லை.
அதே மாவட்டத்தில் இப்பாகமுவ பகுதியில் ஏற்பட்ட மற்றுமொரு மண்சரிவில் 10 பேர் காணாமல் போயுள்ளதாக குருநாகல் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.

இந்திய மீட்புப் பணிக் குழு
இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வந்துள்ளனர். 
இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர். 
இதில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர். 
மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் இந்தக் குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர். 
அவர்கள் அனர்த்த நிவாரண உபகரணங்களையும் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மன்னார் - யாழ்ப்பாணம்
மன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மல்வத்து ஓயாவின் ஆற்று வெள்ளம் மன்னார் மாவட்டத்தின் அநேக இடங்களில் பாதிப்பினை ஏற்படுத்தி யுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தெரிவித்துள்ளார்.
அதற்கு அமைவாக ஏ-32 வீதி மன்னார் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
குறித்த வீதியூடாக  பெரிய மற்றும் சிறிய வாகனங்களில் பயணம் செய்வதை முற்றாக தவிர்க்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலை 
அனுராதபுரம் சிறைச்சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் அங்கிருந்த கைதிகள் பாதுகாப்பாக அனுராதபுரம் பாடசாலையொன்றிலுள்ள தடுப்பு நிலையத்துக்கு  அனுப்பி வைப்பிவைக்கப்பட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.