மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
,
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
இலக்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்.
அதன்படி,
1. கியூபா குடியரசின் புதிய தூதுவராக Patricia Lázara Pego Guerra,
2. கத்தார் நாட்டின் புதிய தூதுவராக Hamad Mohammed Abdullah Al – Sanad Al – Dosari,
3. ஸ்லோவேனியா குடியரசின் தூதுவராகTomaž Mencinஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நற்சான்றிதழ் பத்திரங்களை ஏற்றுக்கொண்டதன் பின்னர், புதிய தூதுவர்களுடன் ஜனாதிபதி சுமூகமான கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


