Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வீழ்ச்சியடைந்துள்ள ரபர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்ப துரித நடவடிக்கை!

,

வீழ்ச்சியடைந்துள்ள ரபர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்ப துரித நடவடிக்கை
வீழ்ச்சியடைந்துள்ள இரப்பர் உற்பத்தியை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான தேசிய திட்டத்தின் திட்டங்களை உடனடியாக மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நாட்டில் இரப்பர் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், இலங்கை இரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் அண்மையில் (21) நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி, திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், அந்தத் திட்டத்தின்படி எதிர்காலத் திட்டத்தைத் தயாரிக்கவும் கூட்டு விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். இரப்பர் உற்பத்தியை அதிகரிக்க இரப்பர் உற்பத்தியாளர்களின் பங்களிப்பைப் பெறுவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை தயாரிக்கவும் அமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இரப்பர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் தனித்தனியாக கலந்தாலோசித்து இரப்பர் உற்பத்தியை மேம்படுத்த முடியாது என்றும், இரப்பர் உற்பத்தி மற்றும் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஒன்றிணைத்து இந்த நாட்டில் இரப்பர் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கூட்டாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இரப்பர் குறித்து எவ்வளவு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற கேள்வியை எழுப்பிய அமைச்சர், எதிர்காலத்தில் குறைபாடுகளைக் குறைத்து இரப்பர் தொடர்பான ஆராய்ச்சியை அதிகரிப்பது அவசியம் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.