Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டிக்கோயா நகரில் வயதான தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் படுகொலை!

அதிகரித்துவரும் செகாலை கொள்ளை வன்முறைச் சம்பவங்கள்!

அதிகரித்துவரும் செகாலை கொள்ளை வன்முறைச் சம்பவங்கள். டிக்கோயா நகரில்  வயதான தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் படுகொலை.

இச் சம்பவம் நேற்று மாலை இடம் பெற்று உள்ளது. இச் சம்பவம் குறித்து சந்தேகநபர்களை தேடி ஹட்டன் பொலிஸார் தீவிர விசாரணை.
டிக்கோயா நகரில் பிரதான வீதியில் உள்ள கடையொன்றில் தனியாக வசித்து வந்த வயோதிப தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கொடூரமாக வெட்டிக்கொலை  செய்யப்பட்டவர்கள் எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட தம்பதியினரின் பிள்ளைகள் கொழும்பு பகுதியில் வசித்து வருவதாகவும், நீண்டகாலமாக இந்த கடையில் வியாபாரம் செய்து வந்த இந்த தம்பதியினர், தற்போது கடையை மூடிவிட்டு அங்கேயே தனியாக வாழ்ந்து வந்துள்ளதாகவும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இனம் தெரியாத ஒரு நபர் கடைக்குள் புகுந்து இவர்களைக் கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்டவர்களின் பிள்ளைகள் இவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காததால், பிள்ளைகள் அது குறித்து அக்கம் பக்கத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் வந்து கடையைத் திறந்து பார்த்தபோதே இந்த படுகொலை வெளிச்சத்திற்கு வந்து உள்ளதுடன், உடனடியாக ஹட்டன் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.