சிறீதரன் எம்.பி. கனடாவிற்கு பயணம் - முக்கிய அமைச்சருடன் விசேட சந்திப்பு
.
கனேடிய வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறிதரன் ஒட்டோவா நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தப் பயணத்தின்போது, கனடாவின் வெளிவிவகார அமைச்சின் இந்தோ- பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதியமைச்சர் வெல்டன் எப்பை சந்தித்து உரையாடவுள்ளார்.
இந்தச் சந்திப்பு ஒட்டோவில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இதன்போது, பொறுப்புக்கூறல், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் சமகால அரசியல் சூழல்கள், தமிழ் மக்களின் நெருக்கடிகள் உள்ளிட்ட பலவிடயங்கள் தொடர்பாக பேசப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய பிரதியமைச்சருடனான சந்திப்பின்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமுன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனும் பங்கேற்கவுள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் கனடாவில் தங்கியிருக்கவுள்ள சிறிதரன் எம்.பி. அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்து உரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.