Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சி.ஐ.டியில் முறைப்பாடு செய்த நீதியமைச்சர்

.

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (16) முறைப்பாடு செய்துள்ளார்.

தமக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் அல்லது தனது அரசியல் மீதான நம்பிக்கையை உடைக்கும் நோக்கில்  எவரேனும் பொய்யான தகவல்களை உள்ளீடு செய்துள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஊடகங்களிடம் அவர் தெரிவித்தார்.

அண்மையில் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் “கலாநிதி ஹர்ஷன நாணயக்கார” என பதிவிடப்பட்டிருந்தமை தொடர்பில் அமைச்சரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அது திருத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்களை பதிவேற்றியதில் தவறு இருப்பதாக பாராளுமன்ற தலைமைச் செயலகம் கடிதம் அனுப்பியதாகவும் நீதி அமைச்சர் இதன்போது கூறினார்.

எனினும் இது குறித்து தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக  நீதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.