Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரஷ்யா இலங்கைக்கு பொட்டாசியம் குளோரைட் உரம் வழங்கியுள்ளது!

.

உலக உணவுத்திட்டத்தின் கீழ் ரஷ்யா, இலங்கைக்கு 55,000 மெட்ரிக் தொன் பொட்டாசியம் குளோரைட் உரத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது.

ரஷ்ய தூதுவர் லெவன் ட்ஜகார்யனால், கொழும்பு துறைமுகத்தில் வைத்து இலங்கையின் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்தவிடம் இந்த பொருட்கள் கையளிக்கப்பட்டன.

ரஷ்யாவின் Uralchem குழுமத்தினால் உற்பத்தி செய்யப்படும் உரமானது, இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்டுள்ளது என கொழும்பில் உள்ள தெரிவித்துள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரத்தினை கிளிநொச்சி விவசாயிகளுக்கு பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா அரசாங்கத்தினால் இலங்கை விவசாயிகளுக்கு வழங்கப்படுவதற்காக நேற்றைய தினம் கையளிக்கப்பட்ட 55000மெற்றிக்தொன் MOP உரம் (எம், ஓ.பி உரம்) கிளிநொச்சி விவசாயிகளுக்கும் வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

பூநகரி, கிளிநொச்சி, கண்டாவளை கமநல சேவை நிலையங்களுக்கு இன்று குறித்த உரம் கொண்டு வரப்பட்டது.

உரத்தினை விரைவாக விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்தார்.