Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மங்கை தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.

மார்ச் மாதம் இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை படைத்த புவிதரன்,

 யாழ். மங்கை தக்சிதா புதிய தேசிய சாதனை 

தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் யாழ். மாவட்ட மெய்வல்லுர் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய நேசராசா தக்சிதா புதிய தேசிய சாதனை நிலைநாட்டி வரலாறு படைத்தார்.

கோலூன்றிப் பாய்தலில் 3.72 மீற்றர் உயரத்தைத் தாவியதன் மூலமே தக்சிதா புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவ வீராங்கனை சச்சினி பெரேரா 3.71 மீற்றர் உயரத்தைத் தாவி நிலைநாட்டியிருந்த தேசிய சாதனையையே தக்சிதா இன்று வியாழக்கிழமை (27) முறியடித்தார்.

சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவியான இவர் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்கிறார்.

இது இவ்வாறிருக்க, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அருந்தவராசா புவிதரன் 5.00 மீற்றர் உயர் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

யாழ். சாவகச்சேரி இந்து கல்லூரியின் பழைய மாணவரான இவர் தற்போது இராணுவ விளையாட்டுக் கழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

கடந்த மார்ச் மாதம் இராணுவ மெய்வல்லுநர் போட்டியில் 5.17 மீற்றர் உயரம் தாவி தேசிய சாதனை படைத்த புவிதரன், போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியில் நேற்றைய போட்டியில் பங்குபற்றியதால் புதிய சாதனைக்கு இலக்கு வைக்க முடியாமல் போனதாக கவலையுடன் தெரிவித்தார்.

ஆண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகி போதிய வெளிச்சமின்மைக்கு மத்தியல் மாலை 6.30 மணிவரை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

தக்சிதாவுக்கும் புவிதரனுக்கும் கணாதீபன் பயிற்சி அளித்துவருகிறார்.

இதேவேளை, ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற எஸ். மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற தட்டெறிதல் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தட்டெறிதலில் 45.08 மீற்றர் தூரத்தை மிதுன்ராஜ் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.