Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தீவிரவாத அச்சுறுத்தல்: அமெரிக்க இராணுவ தளங்கள் உஷார் நிலையில்

.

 

ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ள பல அமெரிக்க இராணுவ தளங்களை உஷார் நிலையில் வைக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

தீவிரவாத தாக்குதல் அபாயம் கருதி இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 10 வருடங்களின் பின்னர் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இராணுவ தளங்களில் ஜேர்மனியின் ஸ்டட்கார்ட் தளம் மற்றும் இத்தாலியின் அவியானோ விமானப்படை தளமும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாதுகாப்பு குறித்த பல்வேறு காரணிகளை தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும், மிகவும் விழிப்புடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எவ்வாறான அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

எனினும், ஐரோப்பிய அதிகாரிகள் கண்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக ஜூலையில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்னதாகவும் ஜேர்மனியில் தற்போது இடம்பெறும் ஐரோப்பிய கால்பந்து தொடரின்போதும் தாக்குதல் ஏற்படகூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.