Breaking News
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தினர்: யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் !
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
பாரபட்சமின்றி வேலை வாய்ப்பு வழங்குமாறு கோரி யாழில் போராட்டம்: ஐனாதிபதிக்கு மகஜர்.
அனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னாள் இன்று இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும் பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா,எமக்கான வாழ்க்கையை நாம் எப்போது வாழ்வது, அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வேலை வாய்ப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மாகாண ஆளுநர் ஊடாக ஐனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டது.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.