தமிழக முதல்வர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்ற தனியார் பயணிகள் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு அரசு முறை பயணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து எமிரேட்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்ற விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை விமான நிலைய அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்லை முதலமைச்சர் செல்லும் எமிரேட்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்ற பிறகுதான் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது.
உடனே இது குறித்து விமான நிலைய பொலிஸார் மற்றும் கட்டுப்பாட்டறைக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றத்துடன் இருந்துள்ளார். இதையடுத்து இன்று(புதன்கிழமை) அதிகாலை முதலமைச்சர் சென்ற பயணிகள் விமானம் பாதுகாப்பாக துபாயில் தரையிறங்கியதாக தகவல் கிடைத்ததுள்ளது.
மேலும், துபாயில் தரை இறங்கிய விமானத்தில் திடீரென பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மிரட்டல் வந்த மின்னஞ்சல் முகவரி மற்றும் கணினி அடையாள எண்ணை வைத்து வைத்து சென்னை விமான நிலைய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.