Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

போதைப்பொருள் மஃபியா சிறுவர்களை பயன்படுத்துகின்றது! - மட்டக்களப்பில் பதினேழு வயது சிறுவன் கைது

.

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள காந்திநகர் பிரதேசத்தில் கேரளா கஞ்சாவுடன் பதினேழு வயது சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் பெருமளவிலான ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் குறித்த சிறுவனை நேற்று (06.12.2024) கைது செய்துள்ளனர்.

இதன்போது கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து வீடு ஒன்றை முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டபோது, தனது உடமையில் மறைத்து வைத்திருந்த போதை பொருட்களை சிறுவன் வீசியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் 10 கிராம் 950 மில்லிக்கிராம் ஹெரோயின் போதை பொருளும், பொதி செய்யப்பட்ட 650 மில்லி கிராம் கொண்ட ஐந்து பக்கற் கேரளா கஞ்சாவும், மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், சான்று பொருட்களுடன் சிறுவனை பொலிஸில் ஒப்படைத்து உள்ளதாகவும், நீதிமன்றில் முன்னிலைப்படத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.