Breaking News
ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசர நிலை பிரகடனம்
.
மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து காலை எட்டு மணிக்கு தரையிறங்கிய விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக விமான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தில் இருந்த 135 பயணிகளும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதனிடையே, விமானத்தை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபடுத்தியுள்ளனர்.