யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் ஆரம்பக்கட்ட தீர்மானம்; வெளியானது முக்கிய அறிவிப்பு
.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த மாதம் இரண்டு தடவைகள் நடைபெற்ற போதும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் நாட்களில் அதன் மத்திய செயற்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ‘ஆரம்பக்கட்ட தீர்மானம் ‘ ஒன்றை எடுத்து அறிவிப்பது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராயவுள்ளது.
அடுத்த மாதம் முதல்வாரத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி தமது தீர்மானத்தை அதற்கு முன்னர் அறிவிப்பதே உசிதமானது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அந்தவிடயத்தில் தாங்களும் கரிசனைக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த ஆரம்பக்கட்ட தீர்மானம் ஒன்றையேனும் எடுக்கும் பொருட்டு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.