Breaking News
மணற்காடு கடற்கரையில் மிதவை கரை ஒதுங்கியது
.

வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்பகுதியில் மிதவை ஒன்று இன்று (7.01.2025) கரையொதுங்கியுள்ளது.
கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறித்த மிதவை கடலில் மிதந்துவருவதை அவதானித்திருந்தனர்
சிவப்பு நிறமுடைய கூம்பு வடிவிலான மிதவை ஒன்று கரையொதுங்கி இருப்பதாக அப்பகுதி மீனவர்கள் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.